சமீப காலமாக தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்கள் நம்பமுடியாத விசித்திரமாக உள்ளன! இன்றைய தினம் ஒ.பி.எஸ் எடுத்து வைத்த ஒவ்வொரு நகர்விலும் திமுக அரசின் ஒத்துழைப்பு கிடைத்ததை எப்படி புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை! அதிமுகவின் சென்ற பொதுக் குழுவின் போது இரவோடு இரவாக நீதிமன்றக் கதவுகளை திறக்க வைத்து விடிய,விடிய விசாரிக்கப்பட்டு, அதிகாலை நாலரை மணிக்கு ஒ.பி.எஸ்சுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததில் திமுக தலைமை காட்டிய அக்கறை உண்மையிலேயே பத்திரிகையாளர்களுக்கு பெரும் திகைப்பை ஏற்படுத்தியது. ஒ.பி.எஸ்சுக்கு பின்னணியில் பாஜக இருப்பதை புரிந்து கொள்ள முடியும்! ...
இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகிய இருவருக்கிடையான தனி நபர் அதிகாரப் போட்டியாக மட்டும் இதை சுருக்கிப் பார்த்து விட முடியாது. இதன் பின்னணியில் உள்ள ஆதிக்க சக்திகள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்ற புரிதல் இல்லாமல் இதை அணுக முடியாது! ஒ.பி.எஸை தூக்கி சுமப்பவர்கள் யார் என பார்க்க வேண்டும்! அதிமுக பொதுக் குழு நடத்துவது தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் விவாதிக்கப்பட்டு வருவது பெரிய துரதிர்ஷ்டமாகும். இன்றைய தினம் உச்சநீதிமன்றம், ”ஓ.பி.எஸ் தரப்பிடம் உங்களுக்குள்ளான கருத்து வேறுபாடுகளை நீங்களே பார்த்து கொள்ளுங்கள். கட்சி விவகாரங்களில் ...
க.செபாஷ்டின், வேலூர் தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு என்பது சாதியரீதியிலானது. கவுண்டர்களுக்கும், முக்குலத்தோருக்கும் இடையிலான பிளவு என பிரபல பத்திரிகையாளர்கள் சிலர் கூறி வருகிறார்களே..? ஒ.பி.எஸ்சுக்கும், இ.பி.எஸ்சுக்கும் சாதிய அடையாளம் இருக்கிறது. சுய சாதி அபிமானமும் இருக்கிறது என்பது உண்மை தான் என்றாலும், இந்தப் பிளவுக்கும், சாதிக்கும் சம்பந்தமில்லை. முக்குலத்து சாதியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர், காமராஜ்… என ஏறத்தாழ அனைவருமே ஒ.பி.எஸ்சுக்கு எதிரான அணியில் தான் உள்ளனர். முக்குலத்து எம்.எல்.ஏவான ராஜன் செல்ப்பாவோ ஒ.பி.எஸ்சிடம் ”கட்சியில் ...
சுய புத்தியும் இல்லாமல், சொந்த பலமும் தெரியாமல் அடுத்தவர் தயவிலேயே தகுதிக்கு மீறிய பதவிகளை பெற்று அனுபவித்து விட்ட பன்னீர் செல்வம், டெல்லி பாஜக தலைவர்களின் தயவால், தலையீட்டால், மீண்டும் அதிமுகவில் முக்கியத்துவம் பெற முயற்சித்து வருகிறார்! டெல்லியில் இன்று பிரதமரை சந்தித்து பேச முயன்று தோற்றுப் போன பன்னீர் செல்வம் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் தலையீட்டை பாஜக தயவில் பெற்று அதிமுகவில் அதிகாரமிக்க பதவியை நிலை நாட்டிக் கொள்ள தவிக்கிறார்! அதிமுக பதவியில் இருந்த போது 11 எம்.பிக்கள் தயவும், பாஜக ...
நள்ளிரவு நீதிமன்றத்தை நாடி, அதிகாலை இரண்டு மணிக்கு வழக்கு விசாரணை செய்ய வைத்து, நடக்கவுள்ள பொதுக் குழுவை அதிகாரமற்றதாக்கும் வண்ணம், அதிகாலை நான்கரை மணிக்கு தீர்ப்பு பெறப்படுகிறது என்றால், என்ன நடக்கிறது இங்கே? நீதிமன்றத் தலையீடுகளின் வழியே ஒருவரை தலைவராக நிலை நிறுத்திவிட முடியுமா? ஒ.பி.எஸ்சுக்கு பாஜகவில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதற்கு நள்ளிரவில் நீதிபதிகள் செய்த கட்டப் பஞ்சாயத்தே சாட்சியாகும்! ஒரு கட்சியின் பொதுக் குழு நடக்கிறது. பல லட்சம் தொண்டர்களின் பிரதிநிதிகளான பொதுக் குழு உறுப்பினர்கள் என்ன தீர்மானம் போடலாம், போடக் ...
எப்போது வேண்டுமானாலும் வெடிக்க காத்திருக்கும் அணுகுண்டாக உள்ளது, அதிமுக! பகைமையும், மோதல்களும் பனிப் போர்வை போர்த்திக் கொண்டுள்ளன! கையில் இருக்கும் கத்தியை முதுகுக்குப் பின் மறைத்துக் கொண்டே, மற்றொரு கையால் இருவரும் கைகுலுக்கிக் கொண்டிருக்கிறார்கள்! ‘’இவர்கள் உண்மையாகவே மோதமாட்டார்களா..? இதைச் சாக்காக வைத்து அதிமுகவிற்கு தலைமை தாங்கும் காலம் கனியாதா?’’ என்ற சசிகலாவின் எதிர்பார்பு நிறைவேறுமா..? ‘’இ.பி.எஸ் பலம் பெற்று வருகிறார்! அவர் ஒ.பி.எஸ் ஆட்களை ஓரம் கட்டுகிறார்.’’ ‘’ஒ.பி.எஸ்சின் அதிகாரம் குறைந்து கொண்டே போகிறது! ஒ.பிஎஸ்சையே காலப் போக்கில் காலியாக்கிவிடுவார் பழனிச்சாமி!’’ ‘’ஐயோ..பாவம் ...
அதிமுக அமைச்சரவையில் ஒருவருக்கொருவர் ஊழலில் சளைத்தவர்கள் இல்லை தான்! என்றாலும் அதில் வேலுமணிக்கு ஒரு தனித்துவமான இடம் உண்டு! அதிகாரம் என்பதை கேள்விகளுக்கு அப்பாற்பட்ட அடக்குமுறையாகவும் கையாளத் தெரிந்த ஒரு அராஜவாதி வேலுமணி. பணம்,அதிகாரம்,அடக்குமுறை ஆகிய முப்பெரும் ஆயுதங்களுடன் தன்னை எதிர்ப்பவர்களை எந்த எல்லைக்கும் சென்று தாக்கக் கூடியவர். இதற்கு பத்திரிகை துறையிலேயே பல உதாரணங்கள் உள்ளன. கமலஹாசனைக் கூட கப்சிப் ஆக்கிய அனுபவமும் அவருக்குண்டு…! தமிழ்நாட்டிற்கு யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் என்று சொல்லிக் கொள்ளட்டும். ஆனால், கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்திற்கு வேலுமணி ...