எட்டு AIIMS கள் உள்ளன! ஆயூர்வேதாவிற்கும் இரண்டு அகில இந்திய மருத்துவக் கல்வி நிறுவனங்கள் உள்ளன! ஆனால், சித்த மருத்துவத்திற்கு மட்டும் ‘எய்ம்ஸ்’ போன்றதொரு அகில இந்திய மருத்துவ கல்வி நிறுவனத்தின் தேவை இருந்தும், நடைமுறைக்கு வராமல் தள்ளிப் போவதன் காரணம் என்ன ? இரு வாரங்களுக்கு முன் (செப்டம்பர்-7) டெல்லி சென்றிருந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் சித்த மருத்துவம் சார்ந்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார் . ஊடகங்களிலும்,  மக்களிடமும் அது போதுமான கவனம் பெறாமல் போனதாகவே தெரிகிறது! ஒன்றிய ...