பீகார் தேர்தல் பல படிப்பினைகளை தந்துள்ளன! இந்த படிப்பினைகளை தமிழக அரசியலுக்கும் பொருத்தி பார்க்கமுடியும்! ஆர்.ஜே.டியும், காங்கிரஸும் தாங்களே அதிக தொகுதிகளின் நின்றது, சிறிய கட்சிகளை அரவணைக்க தவறியது மட்டுமின்றி அவர்களை எதிர்முகாமுக்கு தள்ளியது, அடையாள அரசியல் குறித்த பாஜக ஏற்படுத்தியுள்ள பிம்பத்திற்கு பயந்தது…ஒவைசியை மதிப்பிடத் தவறியது…இப்படி பலவற்றை அலசலாம்…! அதே சமயம் இடதுசாரிகளின் எழுச்சியானது ஒரு முக்கியமான செய்தியை சொல்கிறது. அதில் முக்கியமானது கூட்டாளிகளை சரியாக அடையாளம் காணத் தவறுவது! சென்ற முறை ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் ...