திமுகவின் கூட்டணி கணக்குகள் குறித்த செய்திகள் மக்களிடம் மட்டுமல்ல, அந்த கட்சிக்குள் இருக்கும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளையும் குழம்ப வைத்துக் கொண்டுள்ளன! தேர்தல் கூட்டணிக்கு கொள்கை ரீதியிலான இணக்கமோ, புரிதலோ அவசியமில்லை சதவிகித கணக்குகள் போதும் என்ற குறுகிய கால ஆதாய அரசியல் கூட்டணிக்குள் பொருந்தாமல் சேரும் கட்சிகளின் அடையாளத்தை காலப்போக்கில் காணாமலடித்துவிடும் என்பதற்கு நிறைய உதாரணங்களை சொல்லமுடியும்! திமுகவுக்கு தன் சுயபலம் குறித்த சந்தேகங்கள் மேலெழத் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது! கொள்கை சார்ந்த பிடிமானங்கள் தளர்ந்து, சந்தர்ப்பவாத அரசியலால் ஈர்க்கப்படும் யாருக்குமே இந்த சந்தேகம் ...