இப்படி எல்லாம் கூட நடக்குமா..? என்று ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்தியாவின் மாபெரும் நிறுவனமான ஏர் இந்தியா விற்பனை நடந்துள்ளது. நஷ்டத்திற்கே வழியில்லாத லாபகரமான விமான சேவைத் தொழிலை அரசியல்வாதிகளும், அதிகாரிகளுமாக கூட்டுச் சேர்ந்து சீரழித்தது போதாது என்று இன்று கிட்டத்தட்ட அடிமாட்டு விலைக்கு டாடாவிற்கு தந்துவிட்டனர்! கம்யூனிஸ்ட் தலைவர் சீத்தாராம் யெச்சூரி இந்த விற்பனை குறித்து கொந்தளித்துள்ளார் “நாட்டின் தேசிய சொத்துகளை மத்திய அரசு இடைவிடாமல் சூறையாடி வருகிறது. டாடா நிறுவனத்துக்கு ஏர் இந்தியா ரூ.18 ஆயிரம் கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இது, டாடாவுக்கு மோடி ...
எஸ்.லஷ்மி, காஞ்சிபுரம் உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான திமுக மிகப் பெரிய வெற்றியை ஈட்டியுள்ளதே? வாழ்த்துகள்! ஆளும் கட்சியின் விஸ்வரூப வெற்றி, ஜனநாயகத்தின் வீழ்ச்சியாக மாற வாய்ப்புண்டு! ஆர்.நாராயணன், ஆத்தூர், சேலம் மனித வெடிகுண்டு தாக்குதல் என்றெல்லாம் வன்முறையைத் தூண்டும் வகையில் சாட்டை துரைமுருகன் சீமானை வைத்துக் கொண்டே பேசியிருப்பது பற்றி? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சட்டம், ஒழுங்கிற்கு மொத்த குத்தகையாளராக காட்டிக் கொள்ளும் தமிழக பாஜக, இதில் அமைதியாக ரசிப்பதை கவனியுங்கள்! மு.பாண்டியன், அனுப்பானாடி, மதுரை திமுகவின் சீனியர் தலைவர் துரைமுருகன் ...