ஆட்சிக்கு வந்ததும், ”அர்ச்சகர், ஓதுவார்கள் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்” என அறிவித்தது திமுக அரசு! அவ்வளவு தான்! பரம்பரை, பரம்பரையாக மட்டுமே இது வரை அர்ச்சகர் நியமனங்களை செயல்படுத்தும் கூட்டம் ”இது ஆகமவிதிகளுக்கு எதிரானது” என்று கோர்ட்டுக்கு சென்றுவிட்டது! ஆகமவிதி என்பது இறைவனை வழிபடும் பக்தி முறைகள் சம்பந்தமானதா..? அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் பிழைப்பு தொடர்பானதா..? ஆகமவிதிகள் என்று சொல்லப்படுவது வழிபாட்டுத் தலங்களின் அமைப்பு பற்றியதாகும். கருவறையின் அமைப்பு, வழிபடும் சிலையின் வடிவமைப்பு, எந்தெந்த திசையில் என்னென்ன இருக்க வேண்டும். எப்படி வழிபாடு ...

ஆகஸ்ட் மாதம் 5 , 2019ல் அதிரடியாக அரசியல் பிரிவு 370 ரத்து, தனி அந்தஸ்து ரத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் -முதன்முறையாக- துண்டாடப்பட்டு மூன்று யூனியன் பிரதேசங்களாக சிறுமைப்படுத்தப்பட்டது. மாநில அந்தஸ்தைஇழந்த காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டது. ஊரடங்கு அமுலுக்கு வந்தது. அனைத்து அரசியல் தலைவர்களும்,தொண்டர்களும் இரவோடிரவாக கைது(பா ஜ க தவிர). இன்டரநெட் இணைப்பபிற்கு தடை,பத்திரிக்கைகள் முடக்கம், கவர்னர் போய் லெப்டின்ன்ட் கவர்னர் வந்தார் . ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் ஒரு சிறைச்சாலையாக மாறியது. இத்தகைய ஒருதலைபட்சமான, தான்தோன்றித்தனமான, அரசியல் சட்டம் ...