அதிமுக கூட்டணிக்குள் நுழைய முடியாத – கைவிடப்பட்ட இரு கட்சிகள் – கை கோர்த்துள்ளன! இருவருக்கும் உள்ள ஒற்றுமை இருவருமே அதிமுகவால் பாதிக்கப்பட்டவர்கள். அந்த வகையில் அதிமுகவை எதிரியாக கருதுபவர்கள்! எனவே, எதிரிக்கு எதிரி நண்பன் என கை கோர்த்துள்ளனர்! மற்றபடி இரு தரப்புக்கும் இடையே இணக்கமோ, புரிதலோ, நட்போ முன் எப்போதும் இருந்ததில்லை. இந்த வகையில் தன் நட்பு சக்தி யார்? எதிரி யார் என்ற தெளிவில்லாத கட்சியாகவே இன்னும் தேமுதிக உழன்று கொண்டுள்ளது என்பது நிருபணமாகிறது. இரு கட்சித் தலைவர்களும் ஒருவரை ...

தேடி கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் உள்ள ஒரு கட்சிக்குத் தான் எத்தனை தெனாவட்டு..? ஒன்னும் இல்லாமலே எப்படி கெத்துகாட்டுவது என்பதற்கு இன்று தேமுதிகவை மிஞ்ச நாட்டில் வேறு கட்சி இல்லை! காலி பெருங்காய டப்பா எப்படியும் கொஞ்ச நாளைக்கு வாசனை வீசிக்கிட்டுத் தான் இருக்கும்! ஆனால், சமையலுக்கு பயன்படாது! அது போலத்தான் தேமுதிக! இது ஒரு வேத்துவேட்டு! வெடிக்கிறது மாதிரி சின்ன தீப்பொறி வந்துட்டு தானா அணைந்துவிடும்..! ”234 தொகுதிகளிலும் எங்கள் வேட்பாளர்களை நிறுத்துவோம். எங்க தயவில்லாமல் யாராலும் தமிழ் நாட்டில் ஆட்சி அமைக்க ...