மாபெரும் இசைக் கலைஞனான எஸ்.பி.பியின் மரணத்திற்குத் தவறான முறையில் தரப்பட்ட அலோபதி மருத்துவச் சிகிச்சையே காரணம் என்றும், அவர் மருத்துவமனை செல்லாமல் இருந்திருக்கலாம் என்றும் பரவலான மக்கள் கருத்து உள்ளது! ஆனால், அலோபதி என்பது அறிவியல்பூர்வமான சிகிச்சை அது பற்றித் தெரியாமல் பேசுவது முற்றிலும் தவறு, அறியாமை ….என்றெல்லாம் பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டுள்ளன! ஒரு கலைஞனின் மரணம், ஊடகங்களிலும் மக்களின் பார்வையிலும் இன்றைய விவசாய மசோதா முதற்கொண்டு பல முக்கிய சமூக பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது. மக்கள் மனம் கவர்ந்த கலைஞன் அல்லவா? இழப்பின் வருத்தம் ...