அமரன் படம் தேச பக்தி, காதல் என்ற தளத்தில் ஆழமான உண்மை தன்மையோடு எடுக்கப்பட்டு உள்ளது. இதில் இரு வேறு மதத்தின் காதலர்கள் ஒன்றுபடுகிறார்கள். சாதி கடந்து, மத நல்லிணக்கத்தை சொல்லிய இந்த படத்தின் நல்ல அம்சங்களை புறம் தள்ளி, தங்கள் சாதி அடையாளம் மறைக்கப்பட்டதாக பிரச்சினை  செய்கிறார்கள்: தற்போது இந்த படத்தை பற்றி ஒரு சர்ச்சையை ஒரு சாதி அமைப்பினர்  கிளப்பி காரசாரமாக சமூக வலைதளங்களில் எழுதியதோடு, தங்கள் சாதியினர் நடத்தும் தின இதழான ‘இந்து தமிழ் திசை’யிலும் நான்கு காலத் தலைப்பிட்டு ...