தேசப்பற்றுக்கும் ,போராட்ட குணத்திற்கும் பேர் போன மாநிலம் பஞ்சாப்! தமிழக மக்களை போலவே பஞ்சாப் மக்களும் பாஜகவை இன்று வரை முற்றிலும் ஒதுக்கி வைத்துள்ளனர். இந்தியாவிலேயே காங்கிரஸ் வலுவாக காலூன்றி நிற்கும் மாநிலங்களில் பஞ்சாப் முதன்மையானது! அந்த பஞ்சாபில் தற்போது காங்கிரஸ் கட்சி கலகலக்கத் தொடங்கியுள்ளது! சென்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் வெற்றியை சாத்தியப்படுத்தி முதலமைச்சர் ஆன, கேப்டன் அமீந்தர்சிங் மனம் வெதும்பி முதல்வர் பொறுப்பில் இருந்து ராஜீனாமா செய்துள்ளார். இன்னும் ஐந்தாறு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ...