ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்,ஐ.எப்.எஸ் பணிவிதிகளில் திருத்தம் என்பதன் உள்ளடக்கமானது மாநில அரசுகளை, பேரசர்களுக்கு கப்பம் கட்டி வந்த சிற்றரசர்களின் நிலைக்கு தாழ்த்தி வைக்க முன்னெடுக்கும் சதித் திட்டத்தின் ஒரு அம்சமா..? என்ற சந்தேகம் வலுக்கிறது…! சுதந்திர இந்தியாவில் இது வரை எந்த மத்திய ஆட்சியாளர்களும் சிந்தித்து பார்த்திராத ஒரு சித்து விளையாட்டை இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் செய்வதன் மூலம் பாஜக அரசு செய்யத் துணிந்துள்ளது! மாநிலங்களில் பணிபுரியும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளை தேவைப்படும்போது, மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசின் பணிகளுக்கு ...