ஒருபுறம் உக்ரைனை உசுப்பிவிட்டுக் கொண்டே, மறுபுறம் பொருளாதார தடைகளை ஏற்படுத்தி, ரஷ்யாவை மண்டியிட வைக்க அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பல்வேறாக முயற்சிக்கின்றன. இந்த சிக்கலில் இந்தியா  மதில் மேல் பூனையாக தடுமாறுவது  கேள்விகளை எழுப்பியுள்ளது. போர் நிறுத்தத்திற்கு உண்மையில் செய்ய வேண்டியது என்ன? கிட்டத்தட்ட இருபதாயிரம் இந்தியர்கள் (இவர்களில் மாணவர்கள் அதிகம்) உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்ற சூழல் உள்ளது. இவர்களுக்கு உதவ இந்திய அரசு முன் கூட்டியே எந்தவித முன்னேற்பாடும் செய்யாததால் நிலைமை மோசமடைந்து வருகிறது. இந்த நிலையில் இந்திய அரசின் மெத்தனப்போக்கை ...

உக்ரைன் மீது ரஷ்யா படை போர் தொடுத்தது என்று மேற்கத்திய நாடுகளும், ஊடகங்களும் ரஷ்யாவை குற்றம் சாட்டுகின்றன! அப்படியானால், உக்ரைனில் உள்ள ஒரு பகுதி மக்கள் ரஷ்யாவை ஏன் வரவேற்கிறார்கள்? அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் விரித்த வலையில் எப்படி வீழ்ந்தது உக்ரைன்? அவர்களின் சூழ்ச்சி என்ன? இந்தச் சூழலில், உக்ரைனின் இனப்படுகொலையைத் தடுக்கவே இந்த ராணுவ நடவடிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம் ; நாங்கள் ஒருபோதும் உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்கப் போவதில்லை‘ என்று ரஷ்யா கூறியுள்ளது கவனிக்கத்தக்கது! ஒரு வகையில்,இந்தச்சூழல் நமக்கு வங்க விடுதலையை நினைவூட்டுகிறது. ஏனெனில், ...

உக்ரைன் நாட்டைச் சுற்றி ரஷியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன! ”ரஷியாவிடம் இருந்து உக்ரைனை பாதுகாப்போம், ரஷ்யா அத்துமீறினால் வரலாறு காணாத போர் மூளும்!” என அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் எச்சரித்துள்ளன. போர் மூளுமா? உண்மையான கள நிலவரம் என்ன? குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் உக்ரைனுக்காக உருகி பேசுகின்றன! .  மேற்கத்திய நாடுகளும், நேட்டோ அமைப்பும் தொடர்ந்து ரஷ்யாவை எச்சரிப்பதன் மூலம் ஐரோப்பாவில் யுத்தம் எப்பொழுது வெடிக்குமோ என்ற பதற்றம் உருவாகியுள்ளது. உண்மையில் நடந்து கொண்டிருப்பது என்ன? ஏன் இந்த பதற்றம்?  உண்மையில் ...

சிறைக் கொடுமைகள் குறித்தும், அதில் ஒரு நிரபராதி கடுமையாகத் தண்டிக்கப்படுவது குறித்தும் எடுக்கப்பட்டு அமெரிக்காவில் சக்கை போடுபோட்ட படம் தான் ‘The Shawshank Redemption’. ‘ஜெய்பீம்’ படத்திற்கும் முன்பாக IMDb  ரேட்டிங்கில் உலக அளவில் முன்னணியில் இருந்தது இது தான்! Shawshank என்பது அமெரிக்காவில் உள்ள சிறைச்சாலையைக் குறிக்கும். Redemption என்பதற்கு விமோசனம் என்பது பொருளாகும்.இது ‘ஜெய் பீம்’  போலவே காவல் சித்திரவதையை ரத்தமும், சதையுமாக சொல்லும் ஒரு படம். இதை ஜெய்பீம்மின் முன்னோடி படம் என்றும் சொல்லலாம்! பொதுவாக இதுபோன்ற திரைப்படங்களுக்கு பெரிய ...

உள் நாட்டு தேசபக்த குழுக்களிடையே ஒற்றுமை இல்லாததே அன்றும், இன்றுமாக ஆப்கானில் தொடர்ந்து அந்நியத் தலையீடுகளுக்கு வழிவகுக்கிறது…! பல்லாண்டு காலம் தனக்கு அரசியல் கூட்டாளியாக இருந்த தாலிபான்களை, நெஞ்சார்ந்த நண்பனாகப் பாவித்த தலிபான்களை அமெரிக்கா 2001ம் ஆண்டு குண்டுவீசி தாக்கி படையெடுத்து, ஆப்கனை ஆக்கிரமித்து,  தாலிபன் ஆட்சியை ஏன் அகற்றியது? மதரசா பள்ளியில் பயின்ற மாணவர்களாக  அரசியல் பயணத்தை துவக்கிய தலிபான்கள் கறுப்பு வண்ணம் தரித்தவர்களாக, “ஷரியா ” சட்டத்தை அமுலாக்குவதில் கடுமையானவர்களாக, பெண்களை அடக்கி ஒடுக்குவதில் உச்சமாக விளங்கினார்கள். ஆனால்,அவர்கள் ஆப்கான் மண்ணைத் தீவிரமாக ...

ஆப்கானிஸ்தான் எப்போதுமே ஒரு புரிந்து கொள்ள முடியாத புதிராகவே தொடர்கிறது. வெறும் 3.9 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு. தன்னை ஆக்கிரமித்திருந்த பிரிட்டிஷை 1919ல் வீழ்த்தியது! தன்னை அடிமைபடுத்த முயன்ற ரஷ்யாவை 1996ல் தோற்கடித்து பின்வாங்க வைத்தது. தற்போது அமெரிக்காவை பின்வாங்க வைத்துள்ளது. எத்தனை உயிர் பலிகளுக்கிடையிலும் அயராமல் போராடி அன்னியரை வெளியேற்றிய தாலிபான்களை சீனாவும், பாகிஸ்தானும் சினேகம் பாராட்டுவது எதனால்..? தாலிபான்கள் தலை தூக்குவது இந்தியாவிற்கு ஆபத்தா..? உலகின் மிகத் தொன்மையான கலாச்சாரத்திற்கு பேர் போன நாடு. இஸ்லாமிய தேசமாவதற்கு முன்பு ...