ஸ்டாலின் டெல்லி விசிட் பல கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் வித்திட்டு கூட்டணிக் கட்சிகளையும், மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சந்தர்ப்பவாதம், சரண்டரின் தொடக்கம், காங்கிரசிடமிருந்து விலகல்.. ஆகிய விமர்சனங்கள் வேகம் எடுத்துள்ளன! நாம் இதை எப்படி புரிந்து கொள்வது? டெல்லியில் ஏற்கனவே தமிழக அரசின் விருந்தினர் மாளிகை உள்ளது. திமுகவிற்கு என்று பாராளுமன்ற வளாகத்திலேயே அலுவலகமும் உள்ளது. இந்த புதிய அலுவலகமானது காங்கிரஸ் காலத்திலேயே ஏழு எம்.பிக்களை பெற்றுள்ள எந்த ஒரு கட்சிக்கும் டெல்லியில் அலுவலகம் கட்டிக் கொள்ள அன்றைய மத்திய அரசால் வழங்கப்பட்ட நிலத்தில் தற்போது ...

வேல்முருகன், சுங்குவார் சத்திரம்,காஞ்சிபுரம் நாகலாந்து சம்பவத்தில் அமித்ஷாவின் விளக்கத்தை கேட்டீர்களா? அப்பாவிகள் சென்ற வாகனத்தை தவறுதலாக புரிந்து கொண்டு இராணுவத்தினர் ஆறு பேரைக் கொன்றுவிட்டனர். அதில் கோபமடைந்த கிராமத்தினர் வேன்களுக்கு தீ வைத்துள்ளனர்! இதனால் அவர்களையும் சேர்த்துக் கொன்றுள்ளனர். மாநில போலீசாரை துணைக்கு வைத்துக் கொண்டிருந்தாலே இந்த சம்பவம் தவிர்க்கப் பட்டு இருக்கும்! மாநில அரசு நிர்வாகத்தின் துணையோடு ரோந்து சுற்றி இருந்தால், உயிர்ப்பலிக்கே வாய்ப்பில்லை என உள்ளுர் காவலர்கள் வருந்துகின்றனர். உள்துறை அமைச்சருக்கு இதில் குற்ற உணர்வு கூட இல்லை என்பது தான் ...

அதிமுகவிற்குள் நுழைவதற்கு பாஜகவின் மூலம் பல்வேறு அழுத்தங்களை செய்து பார்த்து அது தோல்வி அடைந்த நிலையில் அமமுகவை கூட்டணியாகவாவது அதிமுக கூட்டணியில் அங்கீகரிக்க வேண்டும் என சசிகலாவும், டி.டி,வி.தினகரனும் பாஜகவிடம் மன்றாடியுள்ளார்கள். இதைத் தொடர்ந்து சசிகலாவை அதிமுக கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று அழுத்தம் தந்து வருகிறது பாஜக தலைமை. அமித்ஷா மீண்டும்,மீண்டும் எடப்பாடிக்கும்,பன்னீருக்கும் இந்த அழுத்தத்தை தொடர்ந்து தந்து வருவது அதிமுக வட்டாரத்தில் கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிமுக வட்டாரத்தில் பேசிய போது,  ”பாஜகவின் அதீத தலையீடு காரணமாக கட்சியின் மேல் ...

மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமுள் காங்கிரசை நாளும்,பொழுதும் அணு அணுவாகப் பிளந்து விழுங்கிவருகிறது பாஜக! இரண்டு நாள் பயணமாக தற்போது கல்கத்தாவில் கால்பதித்துள்ளார் அமித்ஷா! திசைமாறி பயணிக்க தயாராகவுள்ள திரிணமுள் தலைவர்களை தீயாய் தேடி எடுத்து அமித்ஷாவிடம் ஒப்படைக்கும் செயல்திட்டம் படுவேகம் பெற்றுவிட்டது! திரிணமுள்ளின் பலமும்,பலவீனமும் மம்தாதான்! மம்தாவின் செயல்பாடுகள் பாஜகவை எப்படி பலம்பெற வைத்துக் கொண்டுள்ளன என்பதை அலசுகிறது இந்த கட்டுரை! மதவாத அரசியலின் மாபாதகத்தை இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின் போது சந்தித்த மண் தான் வங்கம்! ரத்தகறை படிந்த அந்த மதவாத ...