எந்த ஒரு தனி நபரைப் பற்றியும் மிகைப்படுத்தப்பட்ட ஒரு பிம்பம் கட்டமைக்கபட்டால்..,முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, ’’அந்த நபர் வொர்த் இல்லாதவர் அதனால தான் அவரை தூக்கி நிறுத்த படாதபாடு படறாங்க..அப்படிங்கறத..!’’ அமித்ஷா இதுக்கு முன்னாடி எவ்வளவோ முறை தமிழகத்திற்கு வந்துட்டு போனவரு தானே இப்பம்மட்டும் என்ன இப்படி அலப்பறை வேண்டிக் கிடக்கு! மூவாயிரம் போலீசை பாதுகாப்பு பணியில ஈடுபடுத்தி, சென்னையையே ஸ்தம்பிக்க செய்வானேன்…? வழி நெடுக ஆட்களை நிற்கச் செய்து வரவேற்புகள்..பேனர்கள், பதாகைகள்..இப்படியாக ஒரு உள்துறை அமைச்சர் உலகத் தலைவர் ரேஞ்சிற்கு ...
மக்களை அச்சுறுத்தும் பயங்கரவாத செயல்கள் நிச்சயம் ஒடுக்கப்பட வேண்டியவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ஆனால், பாஜக அரசு கொண்டு வந்துள்ள உபா சட்டத்திருத்தமும்,அதைத் தொடர்ந்த கைதுகளும்,சிறை வைப்புகளும் இந்த சட்டத்தின் நோக்கத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. நமது உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் இந்த சட்ட திருத்தம் பற்றி உரையாற்றுகையில், ’’ தீவிரவாதங்கள் துப்பாக்கியால் உருவாவதில்லை. அவற்றைத் தூண்டக்கூடிய செய்திகள்,எழுத்துகள், இலக்கியங்கள்… ஆகியவற்றால் உருவாகிறது. ஆகவே, அத்தகைய தூண்டல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவே உபாவில் சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளோம் என்றார். அமித்ஷா ...