அதிமுக கூட்டணிக்குள் நுழைய முடியாத – கைவிடப்பட்ட இரு கட்சிகள் – கை கோர்த்துள்ளன! இருவருக்கும் உள்ள ஒற்றுமை இருவருமே அதிமுகவால் பாதிக்கப்பட்டவர்கள். அந்த வகையில் அதிமுகவை எதிரியாக கருதுபவர்கள்! எனவே, எதிரிக்கு எதிரி நண்பன் என கை கோர்த்துள்ளனர்! மற்றபடி இரு தரப்புக்கும் இடையே இணக்கமோ, புரிதலோ, நட்போ முன் எப்போதும் இருந்ததில்லை. இந்த வகையில் தன் நட்பு சக்தி யார்? எதிரி யார் என்ற தெளிவில்லாத கட்சியாகவே இன்னும் தேமுதிக உழன்று கொண்டுள்ளது என்பது நிருபணமாகிறது. இரு கட்சித் தலைவர்களும் ஒருவரை ...