அடேங்கப்பா.. ஆடிய ஆட்டமென்ன..? பேசிய பேச்சுக்கள் என்ன…? கட்டமைத்த பிம்பங்கள் என்ன…? எல்லாவற்றுக்கும் மக்கள் தீர்ப்பு தந்துவிட்டார்கள்! தன் சுயபலத்தை உணராத இந்த சூனியத் தலைமைகள் ஏதோ தமிழகத்தின் எதிர்காலத்தையே தாங்கள் தான் தீர்மானிப்பவர்கள் போல – வெற்றி தோல்விகளே இவர்களிடம் விலாசம் வாங்கித் தான் பயணிக்கும் என்பது போல – அளந்துவிட்டார்கள்! அதுவும் இந்த தேமுதிக காட்டிய திமிர் இருக்கே..! அப்பா, யப்பா அப்பப்பா…! ஆனானப்பட்ட கேப்டனே ஆப் ஆயிட்டாரு எனும் போது இந்த அல்லகைகள் அமைதி காத்து அடக்கமாக இருந்திருந்தால் கூட, ...

2021 தேர்தல், இது வரையிலான தேர்தல்களில் இருந்து பல வகைகளில் மாறுபட்டது! அதிகமான விளம்பரங்கள், நுட்பமான பண விநியோகங்கள், கட்சிகளை இயக்கிய தேர்தல் வியூக நிறுவனங்களின் அதீத தலையீடுகள், ஊடக அறம் உருக்குலைந்த நிகழ்வுகள், மத உணர்வு சார்ந்த பிரச்சாரங்கள், சாதி உணர்வின் பங்களிப்புகள், ஒவ்வொரு கட்சியையும் குறித்த வாக்காளர்களின் மதிப்பீடுகள், தேர்தல் ஆணையத்தின் திணறல்கள்..ஐந்து முனைப் போட்டிகள்…இவை அனைத்தையும் குறித்த பார்வையே இந்தக் கட்டுரை; திகட்ட வைத்த விளம்பரங்கள்; விளம்பரங்களுக்கு மிக அதிகமாக அள்ளி இறைக்கப்பட்டது! அரசாங்கப் பணத்தைக் கொண்டு வெற்றி நடை ...