இன்னும் கூட இந்த ஆட்சியாளர்களின் கவனத்தை கோரா முடியாமல் இருக்கிறது, இந்த கோர விபத்து! இறப்பு எண்ணிக்கை 17 ஐ தொட்டுள்ளது. இன்னும் ஆபத்தான நிலையில் சுமார் 20 பேர் உள்ளனர். மொத்தம் 83 பேர் பாதிக்கப்பட்டதில் உயிர் பிழைத்தவர்கள் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் ஏறத்தாழ பாதி ஆரோக்கியத்தை பறி கொடுத்து பார்ப்பதற்கே பரிதாபமாக உள்ளனர். திருவள்ளுர் மாவட்டம் பெரியபாளையத்தருகே உள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் இயங்கி வரும் புனித பீட்டர்பவுல் கடல் உணவு பதப்படுத்தி, இறாள் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில், கடந்த மாதம் ...
















