கடந்த முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்ச் சமூகத்திற்கு தன் சிந்தனையாளும்,சீரிய எழுத்துக்களாலும், தீவிர செயல்பாட்டுகளாலும் ஆனைமுத்து அய்யா அளவுக்கு பங்களித்த இன்னொருவரைச் சொல்ல முடியாது! இது உண்மை,வெறும் புகழ்ச்சியல்ல! எந்த ஒரு பொருளாதாரப் பின்புலமும் இன்றி அவர் சாத்தித்தவை பிரமிக்கதக்கவையாகும்…! பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் சிறப்பாகத் தொகுத்து,முதன்முதலில்  பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் என முப்பெரும் தொகுதிகளாக்கி 1970 களில் இவர் கொண்டு வந்த தொகுப்பு நூல் தான் தமிழ் நாட்டில் பல இளம் சிந்தனையாளர்களுக்கும்,ஆய்வாளர்களுக்கும் பெரியாரை சரியாக அறிமுகப்படுத்தியது. இத்துடன் நிற்காது 2010 இல் ...