”நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிமுகவினரின் ஊழல்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுப்போம்” என மேடைக்கு மேடை ஸ்டாலின் பேசினார்! உச்சபட்ச ஊழல்களில் திளைத்த அதிமுக ஆட்சி மீது விரக்தியில் இருந்த தமிழக மக்கள் ‘கண்டிப்பாக இந்த ஊழல் பேர்வழிகள் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்’ என திமுக கூட்டணிக்கு பெருவாரியாக வாக்களித்து வெற்றி பெற வைத்தனர்! ஸ்டாலின் கூறிய வாக்குறுதிகளை நம்பி சமூக ஆர்வலர்களும், அந்தந்தத்துறை சம்பந்தப்பட்ட நேர்மையாளர்களும், அந்தந்த ஏரியாவில் வாழும் மக்கள் சிலரும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகுந்த ஆதாரங்களைத் திரட்டி புகார்கள் தந்தனர்! ...