லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக சோதனைகள் நடத்தியதாக வெளிவரும் செய்திகள் இது நம் தமிழகத்தில் தான் நடக்கின்றவா? என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது! எனவே, ஒரு மிகப் பெரிய ஊழல் அரசாங்கத்தின் கீழும் சில நல்ல அதிகாரிகள் முயற்சித்து உறுதியோடு செயல்பட்டால், ஒரு சில ஊழல் அதிகாரிகளையாவது கைது செய்யமுடிகிறது என தெரிய வருகிறது! ஆனால், இந்த ரெய்டுகளைத் தொடர்ந்து இந்த அதிகாரிகள் முறையாக தண்டிக்கப்படுகின்றனரா..? என்ற கேள்வி எழுகிறது… தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் பணிகள் நடப்பதாகவும், ஊழல் அதிகரித்துள்ளதாகவும் ...