டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் அகில இந்திய அளவில் மட்டுமல்ல,அகில உலக அளவிலும் இது வரை காணாத போராட்டமாக உருவெடுத்துள்ளது! பல்லாயிரக்கணக்கில் டிராக்டர்கள், டிரக்குகள், பேருந்துகள் ,வேன்கள் ஆகிவற்றில் வந்து சேர்ந்துள்ள பல லட்சம் விவசாயிகளின் வீரம் செறிந்த எழுச்சியை வெகுஜன ஊடகங்கள் உரிய முக்கியத்துவம் தராமல் தவிர்ப்பதன் மூலம் மக்களிடம் நன்கு அம்பலப்பட்டுவிட்டனர். நான்காவது நாளாகத் தொடரும் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு இன்று இன்னும் விவசாயிகள் வந்து சேர்ந்தவண்ணம் உள்ளனர். கடும் பனிப் பொழிவு,போலீசார் தரும் நெருக்கடிகள்,சாலைகளில் பள்ளம் தோண்டியும்,கற்குவியல்களை வைத்தும் ஏற்படுத்தப்படும் ...