நீட் எதிர்ப்பில் தமிழக அரசின் போலித்தனமான நிலைப்பாட்டைக் கண்டித்தும் மாணவர்கள் தற்கொலை தொடராமல் இருப்பதற்கான தீர்வைக் கோரியும் மக்கள் பாதை அமைப்பின் இளைஞர்கள் செப்டம்பர் 15 முதல் சாலிகிராமத்திலுள்ள அந்த இயக்கத்தின் தலைமையகத்தில் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வந்தனர். குறிப்பாக உதயநிதி ஸ்டாலின்,திருமுருகன் காந்தி,இயக்குநர் கௌதம்,மயில்சாமி…போன்றோர் வந்து பேசிச் சென்றனர். இந்த நிலையில் காவல்துறையினர் உண்ணாவிரதத்தை உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நிர்ப்பந்தம் கொடுத்தனர்.ஆனால்,தமிழக அரசின் சார்பில் யாராவது அமைச்சரோ,அதிகாரியோ வந்து நீட் தொடர்பாக உறுதியான நிலைப்பாடு எடுப்பதாகப் பேசி உத்தரவாதம் கொடுத்தால் முடித்துக் கொள்வதாக இளைஞர்களும் தெரிவித்தனர்! அந்தப்படியே ...