நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணையத்திற்கு இது வரை சம்பளமாக மட்டும் சுமார் 30 கோடி ரூபாய் செலவாகியுள்ளது! இது தவிர ஆணையத்திற்கான நிர்வாக செலவுகளுக்காக மேலும் சில கோடிகள் செலவாகியுள்ளது! ஏறத்தாழ ஒன்பது முறை ஆறுமுகச்சாமி ஆணையத்திற்கு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 25, 2017 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட இந்த கமிஷன் மூன்று மாதத்திற்குள் விசாரித்து உண்மைகளை வெளிக்கொணரும் என அன்றைய அதிமுக ஆட்சி கூறியது. ஆனால், எப்போது உண்மைகள் வெளியாகும் என்பது மட்டுமல்ல, உண்மை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா..? என்பதற்கான உத்திரவாதமும் கிடைத்தபாடில்லை! இந்தச் ...