வேகமாக ஓராண்டு உருண்டோடிவிட்டது! நினைத்தால் பிரமிப்பாக உள்ளது! இரண்டாம் ஆண்டில் காலெடுத்து வைக்கிறோம். ஓராண்டுக்கு முன்பு இந்த நாள் தான் அன்புத் தம்பி கவின் (Invalai) அறம் இணைய தளத்தை அழகுற வடிவமைத்துக் கொடுத்தார்! என்னுடைய 36 வருட பத்திரிகை துறையில் இந்த ஓராண்டு மிகக் கடினமானது. பெரும் உழைப்பாற்றலை செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளியது! மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததும் கூட! அரசியல்,சமூகத் தளங்களில் கட்டமைக்கப்படும் மாயைகளைக் களைந்து,கள யதார்தங்களை வெளிப்படுத்துவது, வெகுஜன தளத்தில் பேசத் தயங்கி, மறைக்கப்படும் உண்மைகளை உரத்துச் சொல்வது ஆகிய ...

மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது என்பதற்கேற்ப அறம் பேசும் உண்மைகள் சமூக, அரசியல் தளத்தில் அதிர்வுகளை தொடர்ந்து உருவாக்கி வருகின்றன! எழுதப்படும் வார்த்தைகளில் வாய்மை இருந்தால், அதற்கொரு வலு இயல்பாகவே ஏற்பட்டுவிடும்! அறச் சிந்தனையின் பாற்பட்ட வாசகர்களே  இதழின் பலமாகும்! சமகால நிகழ்வுகள் குறித்த சமரசமற்ற விமர்சனங்கள்! சார்பு நிலையின்றி யதார்த்தங்களை உள்வாங்கி உண்மைகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைகள்! உள்ளுர் நிகழ்வுகள் தொடங்கி, உலக அரங்கில்  நடக்கும் முக்கிய நிகழ்வுகள் வரை அலசி, ஆய்வு செய்து சாரத்தை பிழிந்து எளிமைப்படுத்தி தரும் கட்டுரைகள்! இப்படியாக 11 ...

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு ஏக தடபுடலாக அறிவித்து கொண்டாடப்படுகிறது! உண்மையில் இது தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு அல்ல, சென்னை மாகாண சட்டமன்றத்தின் நூற்றாண்டு என்றே கொண்டாடப்பட்டு இருக்க வேண்டும். 1921 ல் முதல் சட்டமன்றமானது அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்த ஆந்திரா, கேரளா, கர்நாடாகாவின் பகுதிகளையும் உள்ளடக்கியது. தமிழ் நாட்டுக்கேயான சட்டமன்றம் என்பது 1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்பது மொழி அடிப்படையில் உருவான பிறகே ஏற்பட்டது! அதன் பிறகே ஆந்திரா, கேரளா, கர்நாடகா என எல்லா மாநிலங்களுக்கும் என தனியாக சட்டமன்றம் தோற்றுவிக்கப்பட்டது. ...

அ.தி.மு.க ஆட்சியின்போது நெடுஞ்சாலைத் துறையில் எடப்பாடி பழனிசாமி சொல்படி செயல்பட்ட   ஊழல் தலைமைப் பொறியாளர்களைப்  பற்றி  அறம் ஆன்லைனில் எழுதியிருந்தோம். அதனைத் தொடர்ந்து  ஊழல் பெருச்சாளிகளான தலைமைப் பொறியாளர்கள் கீதா, சாந்தி, விஜயா, சென்னையில் பாலப் பணிகளை விரைந்து முடிக்க முனைப்பு காட்டாத சுமதி ஆகியோரை  இந்த அரசு பணியிட மாறுதல் செய்தது பாராட்டக்கூடியதாக இருந்தது! ஊழலற்ற ஆட்சியைப் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.  ஆனால் இந்தத் துறையில் இப்போது நடந்து கொண்டிருக்கும் அனைத்தும் அந்த  நம்பிக்கையை சிதைத்துவிட்டது. ஊழலின் நாற்றம் வெளியேறி விடாமல் பார்க்கும் ...

ஓட்டுப்போடுவதோடு முடிந்துவிடுவதல்ல வாக்காளர்களின் உரிமை! நம் தேவைகளை மக்கள் பிரதிநிதிகளை பேசச் சொல்லி நாம் ஆணையிடமுடியுமா.? அதற்கான வழிமுறைகள் உண்டா..? செயல்படுத்துவோம்! முறையான சனநாயகம் வீழ்ச்சியடைந்து வரும் இந்த இருண்ட காலத்தில், ஒரு ‘வாக்காளர்களின் ஆணையை ’ ஐக்கிய விவசாயிகள் முன்னணி’  வெளியிட முடிவு செய்துள்ளது. சனநாயகத்தின் இயக்க ஆற்றல் குறைந்து கொண்டிருக்கும் தருணத்தில், தெருக்களிலே சனநாயகம் மீட்கப்படுகிறது.  ‘வாக்காளர்களின் ஆணை’ (voters whip) சக்திவாய்ந்தது என்றாலும் அதன் பின்னால் உள்ள கருத்து எளிமையானது. இப்போது ஒவ்வொரு கட்சியும் அதன் நாடாளுமன்ற,  சட்டமன்ற உறுப்பினர்களுக்கு   ‘இந்தெந்த ...

சசிகலாவே அரசியல் வேண்டாம் என்று முடிவெடுத்தாலும் ஊடகங்களுக்கு சசிகலா வேண்டும். ஊடகங்களின் செய்திப் பசிக்கு தர்ம நியாயங்களே கிடையாது! இன்றைக்கு எவ்வளவு பார்வையாளர்கள் கிடைத்தார்கள் என்பது காட்சி ஊடகங்களுக்கும், எவ்வளவு பத்திரிகை கூடுதலாக வாங்கப்பட்டன என்பது அச்சு ஊடகங்களுக்கும் ஒரு முக்கிய இலக்காக உள்ளன! அந்த அடிப்படையில் தான் அனைத்தையும் அணுகுகிறார்கள்! இந்த நோக்கங்களே அவர்களை வழி நடத்துகின்றன! தந்தி டிவியில் என்னென்ன கேள்விகள் மக்கள் சார்பாக சசிகலாவிடம் வைக்கப்பட்டிருக்க வேண்டுமோ அவை எதுவுமே கேட்கப்படவில்லை. சசிகலாவிடம் பேச கிடைத்த வாய்ப்புக்காகவே அவர்கள் புளகாங்கிதம் ...

நாட்டுமக்களின் அரிய பாதுகாவலனாக, அரவணைக்கும் ரட்சகனாகத் திகழ வேண்டிய உச்ச நீதிமன்றம் சமீப காலமாக அதன் கடமையில் இருந்து நழுவுகிறதோ என்ற சந்தேகம் பெரும்பாலோர் மனதில் தோன்றியுள்ள சூழலில், உச்சநீதி மன்ற நீதிபதி டி.ஒய். சந்திர சூட் அவர்கள், ”பெரும்பான்மை மனப்போக்கின் அடிப்படையில் குற்றசெயல்களை பிரித்துப் பார்ப்பதும், குற்றவியல் நடைமுறைகளை எடுத்துச்செல்வதும் நீதியை நிலை நாட்டும் செயலல்ல! மாறாக, அவை நீதியையும் சமத்துவத்தையும் குழிதோண்டி புதைக்கும் செயலாகும்.” என்று பேசியுள்ளது சற்று ஆறுதல் தருகிறது! சமீபகாலமாக நாட்டின் நீதி பரிபாலன அமைப்புகள், மக்களை பாதித்த ...

கட்சிமாறிகளின் கைலாயமாக மாறிக் கொண்டுள்ளது திமுக! எதற்காக மக்கள் திமுகவிற்கு வாக்களித்தார்கள்..? அதிமுக ஊழல் ஆட்சிக்கு மாற்று வேண்டும் என்று தானே..? அந்த ஊழல்களுக்கு காரணமான அதிமுகவினர் பலரே திமுகவில் வந்து ஐக்கியமானால், திமுகவின் நிறம் மாறாதா..? ஏதோ ஸ்டாலின் முன்னிலையில் சேர்கிறார்கள் என்பதைக் கடந்து, ஆங்காங்கே மாவட்டங்களிலும் அங்குள்ள முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள்! முன்னாள் எம்.எல்.ஏக்கள் பி.ஆர்.சுந்தரம் மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி, அமமுக நெல்லை மாவட்ட தலைவர் பரமசிவன் அய்யப்பன்…இப்படிப் பலர் சேர்ந்த வண்ணம் உள்ளனர். அதிமுக ஆட்சியில் உயர் ...

தமிழ்நாட்டை விட்டுவிடக் கூடாது இந்தியாவின் மிக முக்கிய மாநிலமான தமிழ் நாட்டிற்கும் அமைச்சரவைரையில் ஒரு பிரதிநிதித்துவம் வேண்டும் என்று பாஜக மேலிடம் முடிவெடுத்த போது, அவர்கள் தோழமை கட்சியான அதிமுகவிற்கு தான் அதை முதலில் கொடுக்கத் திட்டமிட்டனர். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று எந்த காரணத்தைக் கொண்டும் பாஜகவை மீறி அதிமுக செயல்படாது என்பது மட்டுமல்ல. பாஜகவின் மீதான அதிமுக விசுவாசத்தை நிலைபெறச் செய்யவும் இது உதவும். இரண்டாவது அதிமுக ஆட்சியில் இருந்த காலத்தில் – குறிப்பாக பன்னீர் மற்றும் எடப்பாடி பொறுப்பில் ...

எப்போது வேண்டுமானாலும் வெடிக்க காத்திருக்கும் அணுகுண்டாக உள்ளது, அதிமுக! பகைமையும், மோதல்களும் பனிப் போர்வை போர்த்திக் கொண்டுள்ளன! கையில் இருக்கும் கத்தியை முதுகுக்குப் பின் மறைத்துக் கொண்டே, மற்றொரு கையால் இருவரும் கைகுலுக்கிக் கொண்டிருக்கிறார்கள்! ‘’இவர்கள் உண்மையாகவே மோதமாட்டார்களா..? இதைச் சாக்காக வைத்து அதிமுகவிற்கு தலைமை தாங்கும் காலம் கனியாதா?’’ என்ற சசிகலாவின் எதிர்பார்பு நிறைவேறுமா..? ‘’இ.பி.எஸ் பலம் பெற்று வருகிறார்! அவர் ஒ.பி.எஸ் ஆட்களை ஓரம் கட்டுகிறார்.’’ ‘’ஒ.பி.எஸ்சின் அதிகாரம் குறைந்து கொண்டே போகிறது! ஒ.பிஎஸ்சையே காலப் போக்கில் காலியாக்கிவிடுவார் பழனிச்சாமி!’’ ‘’ஐயோ..பாவம் ...