ஒப்பந்த அடிப்படையில் வேலை நியமனம், உரிமையற்ற அடிமைகளாக நடத்தப்பட்ட தொழிலாளர்கள் குறைந்த சம்பளம், கூடுதல் வேலை! அதாவது பாதி சம்பளம்! ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற உழைப்புச் சுரண்டல்…கண்ணீருக்கும் மதிப்பில்லை, கதறலுக்கும் மதிப்பில்லை. மத்திய, மாநில அரசுகள், தொழிலாளர் நல ஆணையம் அனைத்தும் மெளனம் சாதித்தன…இறுதியில் பொங்கி வெடித்தது தொழிலாளர்கள் கலவரம்! பெங்களூரு விஸ்ட்ரான் இன்போகாம் தொழிற்சாலை  கலவரம் சட்ட ஒழுங்கு பிரச்சினையல்ல, சகிக்க முடியாத மனிதாபிமானமற்ற உழைப்பு சுரண்டலுக்கு எதிரான கோபாவேசமேயன்றி, வேறல்ல! நிரந்தர தொழிலாளிகள் ஆயிரம் பேர்  பணிபுரியும்  ஒரு தொழிற்சாலையில், அதைவிட  ...

இன்னும் அவரது மறைவு நம்பமுடியாத செய்தியாகவும், மீள முடியாத துக்கமாகவும் என்னை ஆக்கிரமித்துள்ளது..! அப்துல் ஜப்பார் அய்யாவை அவரது மகன் ஆசிப் மீரானின் வழியேதான் நான் அறிந்தேன். கிரிக்கெட் வர்ணனையாளர் என்னும் அடைமொழியைத் தாண்டிய அவருடைய இலக்கியப் பங்களிப்பை ‘காற்று வெளியினிலே’ நூலின் வழியே நான் அறிய நேர்ந்தது! சுயசரிதம் போல் அமைந்த அந்நூலில், அவருடைய இளவயது ஆர்வங்களும் ஆசைகளும் வெளிப்பட்டுள்ளன. இலங்கை வானொலியில் நாடக நடிகராக வாழ்வைத் தொடங்கிய அப்துல் ஜப்பார், அதன்பின் பல்வேறு பரிமாணங்களை எடுத்திருக்கிறார். ஊடக மொழிக்கு கவர்ச்சியையும், வசீகரத்தையும் ...

ஒரு கட்சி, இரு தலைவர்கள்! அதிமுக என்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு கட்சி தான்! ஆனால், உள்ளே இருப்பவர்களுக்கு அது ஒரு கட்சியல்ல! ஒரே பெயரிலான இரு வேறு இயக்கம்! இது தான் யதார்த்தம்! இரு தலைவர்களில் ஒருவர் தோற்றவர், தான் ஏமாற்றப்பட்டதாக சதா சர்வ காலமும் வருந்தி தன் வலிமையை காட்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அவருக்கு கட்சிக்குள் கூட்டாளிகள் குறைந்து கொண்டே வருகின்றனர்! அவரோடு தொடர்பில் இருப்பவர்கள் மெல்ல,மெல்ல, எதிர்முகாம் சென்று விடுகின்றனர்! அதனால்,அவர் கட்சிக்கு வெளியில் தனக்கான ...

ஒரு பத்திரிகையாளன் பார்வையில் வரலாற்றை உள்வாங்கி, கடந்த கால வரலாற்றை சமகால அரசியலோடு தொடர்புபடுத்தும் கண்ணிகளைக் கண்டறிந்து வரலாற்று புதினங்களை படைப்பதில் வல்லவர் தமிழ்மகன்! மறைக்கட்ட வரலாறுகளை, திரிக்கப்பட்ட வரலாறுகளின் உண்மைத் தன்மையை நாவல் வழியே சொல்வதன் மூலம் ஒரு மிகச் சிறப்பான வரலாற்று பங்களிப்பை செய்து வருகிறார்! பொதுவாக வரலாற்று நாவல் என்றால் சேர,சோழ,பாண்டியன் கதைகளைத்தான் நாம் படித்து இருப்போம். அதில் சண்டை இருக்கும்; காதல் இருக்கும்; வருணனை இருக்கும். ஆனால் வரலாற்றில் மறைக்கப்பட்ட , போரை விரும்பாத மன்னனின் கதையை இந்த நாவல் ...

விவசாயிகள் போராட்டம் இன்னும் பலருக்கு சரிவரப் புரியவில்லை..! ஏன் விவசாயிகள் இவ்வளவு ஆக்ரோசமாகப் போராடுகிறாங்க…அப்படி என்ன பெரிய தீமை நடந்திருச்சு..? ஒன்னும் பெரிசா நடந்திடலை..! விவசாயத்தையும்,உணவு பாதுகாப்பையும் தன் பொறுப்பிலிருந்து அம்பானிக்கு கொஞ்சமும், அதானிக்கு கொஞ்சமுமாக அரசாங்கம் பிரித்து தாரை வார்த்துவிட்டது! அவ்வளவு தான்! ’’அதெப்படி கொடுக்க முடியும்? இப்படி புரூடா விடக்கூடாது’’ ன்னு சொல்றவங்க பொறுமையாக ஐந்து நிமிடம் இதைப் படியுங்கள்! விவசாயிகளுக்கும், அரசாங்கத்திற்குமான தொடர்பு என்ன? விவசாயிகள் அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பது என்ன? ”எனக்கு ஒன்னுன்னா அரசாங்கம் துணையிருக்கு’’ என்ற ஒரு நம்பிக்கை ...

ஏதோ மன்னராட்சி போல மக்களுக்கு பொங்கல் பரிசாம்! தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய கையோடு, இப்படி ஒரு அறிவிப்பு; அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.2,500 மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துவிட்டு, ”பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைப்போம்’’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்! இது அரசாங்க செலவில் செய்யப்படும் ஓட்டுபொறுக்கி அரசியல்! அதுவும் அரசாங்க ஊழியர்களைக் கொண்டு, கட்சிக்கு ஆதாயம் சேர்க்கும் விதமாக ...

தமிழும், தமிழரும் ஏற்றம் பெறவே தன் வாழ்வை முற்றமுழுக்க அர்ப்பணித்து வாழ்ந்தவர் பெருந்தமிழ் போராளி, ’தமிழ் தாத்தா’ என்றழைக்கப்பட்ட கி.ஆ.பெ விசுவநாதம்! “நான் உயிரோடு இருந்து தமிழை வளர்ப்பதை விட என் புதைகுழியே அதிகமாக தமிழை வளர்க்கும்.” என்றதன் மூலம் தமிழ் வளர்ச்சிக்கே தன்னை விதையாக்கியவர்  கி.ஆ.பெ.விசுவநாதம்! தமிழறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், முற்போக்குச் சிந்தனையாளர்,  அரசியல்வாதி, பத்திரிகையாளர்,தமிழ்ப் போராளி, ஏற்றுமதி வணிகர் எனப் பன்முகம் கொண்டவர் கி.ஆ.பெ.விசுவநாதம்! சித்த மருத்துவத்திற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பால் – சித்த மருத்துவத்துக்கு உயிர் கொடுத்த வகையில் ...