ஒன்னுமே புரியல..அரவக்குறிச்சியில…! என்னமோ நடக்குது..மர்மமாய் இருக்குது..! பாஜகவின் எதிர்கால முதலமைச்சராக கருதப்படும் அண்ணாமலையை எப்படியாவது சட்டசபைக்குள் இடம் பெற வைக்க மத்திய பாஜக அரசு சாம,பேத,தான,தண்டங்களை பிரயோகித்து வருகிறது…! பிரதமரே அரவக்குறிச்சி மீது தனிப்பட்ட அக்கரை காட்டுகிறாராம்…! திமுகவை மிரட்டி, முடக்கி அரவக்குறிச்சியை அடித்து, தூக்கி எடுத்துவிட பாஜக அரசு முயற்சிப்பது உண்மையா…? என்பது பற்றி ஒரு விசாரணையில் இறங்கினோம். ‘’முதல்ல அவரு அதான் அண்ணாமலை ஓட்டுக் கேட்டு வந்தப்ப உண்மையிலேயே ஒரு காமெடிப் பீஸாத் தான் தெரிஞ்சார்..! அவரோட பேட்டிங்க, காணொலிங்க..எல்லாம் பாத்தபோது ...