”தமிழில் அர்ச்சனை, கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்தல், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகியவை திமுக ஆட்சியிலும் திரிசங்கு நிலையில் தான் தொங்குகிறது… ஏன் இந்த தடுமாற்றம்..? எதற்கிந்த ஊசலாட்டம்..?” என சீறுகிறார் ‘சிகரம்’ ச.செந்தில்நாதன். “அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யப்படும்” என்ற பலகையை தமிழ் நாட்டில் உள்ள பெரிய கோவில்கள் அனைத்திலும்  “பளிச்” என பார்க்கலாம். தி.மு.க முதன் முதலாக ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து இதற்கான முயற்சி எடுக்கப்பட்டது, அ.தி.மு.க ஆட்சியிலும் இதுபோன்ற விளம்பர பலகைகள் கோவிலில் வைக்கப்பட்டிருந்தன. 2021 தேர்தலில் தி.மு.க வெற்றி ...