கள்ளக் குறிச்சி மாணவி மர்ம மரண விவகாரத்தில் விரும்பத்தாக வன்முறை வெடித்தது வருத்தத்திற்குரியது. ஆனால், நடந்த வன்முறைக்கான பழியை ஒட்டு மொத்தமாக அறச் சீற்றத்துடன் அணி சேர்ந்த மக்கள் மீதும், முற்போக்கு இயக்கங்கள் மீதும் போட்டு, சகட்டுமேனிக்கு கைது செய்வதன் மூலம் தங்கள் பலவீனங்களை அரசு நிர்வாகமும், காவல்துறையும் மறைத்துவிட்டு, யார், யாரையோ திருப்திபடுத்த துடிக்கின்றனவா? அநீதிக்கு எதிராக போராடிய மக்களை சமூக விரோதிகள், வன்முறை கும்பல் என்ற அடைமொழிகளில்  முக்கியமான மெயின்ஸ்டீரிம் பத்திரிகைகள் எழுதுகின்றன. 25 ஆண்டுகளாக இயங்கும் ஒரு பள்ளி மக்களிடம் ...

குற்றவாளிகள் அதிகாரம் மிக்கவர்களாக ஆகிவிடுகிறார்கள்! நிரபராதிகளும், நியாயத்தை கேட்பவர்களும் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள்! குஜராத் கலவரத்தில் கொல்லப் பட்டவர்களுக்காக இடையறாது துணிச்சலாக குரல் கொடுத்த தீஸ்தா செதல்வாத் கைது செய்துவிட்டால் உண்மைகள் ஊமையாகுமா? உலகையே உலுக்கிய குஜராத் மதவெறிப் படுகொலைகள் தொடர்பான பல வழக்குகளில் குல்பர்க்கா சொசைட்டி என்ற இடத்தில் 68 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் முக்கியமானது! இந்தப் பகுதியில் வசித்த காங்கிரஸ் எம்.பியான ஜாப்ரி அவர்கள்  கலவரக்காரர்கள் தங்களை சூழ்ந்துள்ளது குறித்து அந்த இக்கட்டான நேரத்தில் அன்றைய முதல்வர் மோடி மற்றும் உயர் ...

மாரிதாஸ் விவகாரத்தில் அவசரகதியில் எப்.ஐ.ஆரையே நீக்கி, வழக்கை ரத்து செய்து நீதிபதி நடந்து கொண்டது விசித்திரமானது. இந்த வழக்கில் அரசு மேல் முறையீடு செய்யலாம். அத்துடன் கொரானாவையும், இஸ்லாமியர்களையும் சம்பந்தப்படுத்திய வழக்கில் அவரை கடுமையாக தண்டிக்க வாய்ப்புள்ளது. வழக்கமாக குற்றவியல் வழக்குகள் உட்பட எந்த வழக்குகளும் இந்த மின்னல் வேகத்தில் இறுதி தீர்ப்பு வழங்கப்படுவதில்லை. புலன் விசாரணைக்கு தடை அளிக்கப்பட்டாலே, சிறையில் இருப்பவர் வெளியில் வந்துவிடுவார். காவல்துறை குற்றத்தை புலன் விசாரணை  செய்வதற்கான முதல்படியே முதல் தகவல் அறிக்கைதான்,. கடுமையான பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு ...

பப்ஜி மதன் விவகாரத்தின் உள்ளே சென்று பார்த்தால்.., இவன் மட்டுமல்ல, இவனை போல இன்னும் பல ஜித்தன்ங்க இந்த பீல்டுல குழந்தைகளை சின்னாபின்னப்படுத்திக் கிட்டு இருக்காங்கன்னு தெரியுது..! ஒன்றரை வருஷத்திற்கு முன்னால குழந்தைகள் செக்ஸ் படங்களை பார்க்கிறவங்களை கண்காணிக்கிறோம் அவங்க நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவாங்கன்னு காவல்துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்புக்கு பிறகு தான் இந்த மாதிரி விவகாரங்களே டாப் கீருல போயிருக்கு..! எத்தனையோ சமூக அரசியல் பிரச்சினைகளை பற்றி விலாவாரியாக எழுதிகிட்டு இருக்கேன். இந்த மதன் விவகாரம் வெளியே வந்த போது தான் ...

ஆண்டான் – அடிமை ஆட்சி முறையை மீண்டும் நிறுவுவதற்காகத் தான் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது என்பதற்கு இந்த சம்பவமும், இதைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள்,மனித உரிமை ஆர்வலர்கள் என 16 பேர் கைது செய்யப்பட்டதுமே சாட்சியாகும்! ஆங்கிலேயர்  படையில் அழுத்தப்பட்ட சாதியினரான மகர்(தலித்) சாதியினர், ஆதிக்க சாதியினரான பேஷ்வாகளை  எதிர்த்து போரில் வெற்றி பெற்றது வரலாறு! அந்த நிகழ்வின் இருநூறாவது ஆண்டு விழா மகாராஷ்டிரா மாநிலத்தில் பீமா கொரேகான் என்ற இடத்தில், ஜனவரி-1,  2018 ஆம் ஆண்டு நடைபெற்றது..! தாங்கமுடியுமா ஆதிக்க ...

பத்திரிகையாளர் போர்வையில் பஞ்சமா பாதகங்களை மனித நேயமின்றி அரங்கேற்றிய ரிபப்ளிக் சேனல் முதலாளி அர்னாப் கோஸ்வாமி கைதாகியுள்ளார். ஒன்றா, இரண்டா..? ஒவ்வொரு நாளும் ஒரு புரளி, ஒவ்வொரு விவகாரத்தையும் திசைதிருப்பும் குயுக்தி…என அவர் செய்த அநீதிகளை பட்டியலிட்டால், பல அத்தியாயங்கள் எழுதலாம்! பத்திரிகையாளர் பணி என்பது உரிமை மறுக்கப்படும் எளிய மக்களுக்கான நீதியின் குரலாக ஒலிப்பதாகும்! ஆனால், அர்னாபோ அதை அநீதியை செய்பவர்களை நியாயவான்களாக்கும் பணியாக மாற்றிக் கொண்டவர். ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் ஒரு அரசியல்பார்வை இருக்கலாம் தவறில்லை. ஆனால், மாற்று அரசியல் கருத்துள்ளவர்களையும்,மதித்து விவாதித்து ...

சர்வாதிகார ஆட்சியாளர்களின் கண்களுக்கு கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ் சதிகாரராகத் தான் தெரிந்தார்! அவருக்கு நஞ்சை கொடுத்து கொன்றனர். ஆனால்,சாக்ரடீஸின் தத்துவங்கள் சாகாவரம் பெற்றுவிட்டன! அதே போல இன்று பாஜக அரசின் கண்களுக்கு மனித உரிமை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும், சிந்தனையாளர்களும்,வழக்கறிஞர்களும்  தண்டிக்கப்பட வேண்டிய நக்சலைட்டுகள்! இவர்களை சிறையில் தள்ள இந்த ஒற்றை குற்றச்சாட்டு போதுமானதாகிவிடுகிறது! இந்தியா முழுவதும், காஷ்மீரிலிருந்து தமிழ்நாடு வரை,  பேராசிரியரில் இருந்து  மாணவர் வரை, கவிஞர் முதல் சமயத் துறவி வரை என கடந்த இரண்டு ஆண்டுகளில், பயங்கரவாத தடை ...

புகழ்பெற்ற  இலயோலா கல்லூரியை நடத்தி வருவது இயேசு சபை. இந்த சபையைச் சார்ந்தபாதிரியாரும், புகழ்பெற்ற சமூக சேவகருமான 83 வயதான, ஸ்டான் சாமி என்று அழைக்கப்படுகிற தனிஸ்லாஸ் லூர்துசாமி, தேசிய புலனாய்வு நிறுவனத்தால் அக்டோபர் 8 ஆம் தேதி  கைது செய்யப்பட்டுள்ளார்.ஏன் கைது செய்யப்பட்டார்? கார்ப்பரேட்டுகள் ஏழை,எளிய பழங்குடி மக்கள் வாழும் மலைப் பிரதேசங்களை ஆக்கிரமித்து,தொழிற்சாலைகள் அமைப்பதை தடுத்து விளிம்பு நிலை மக்களின் அரணாக நின்றார் என்பதால் மத்திய அரசின் கடும் கோபத்திற்கு ஆளாகிவிட்டார். இவரது கைதுக்கு மேத்தா பட்கர், அருந்ததிராய்,ஸ்பனாம் ஆஸ்மி,ஹர்ஸ்மந்தர், அபூர்வானனந்த்…உள்ளிட்ட ...