கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு முன் திரண்டு கதறி அழுகின்றனர். வேலைக்கு சென்று திரும்பியவர்களை, கல்லூரி மாணவர்களை, கடை வீதிக்கு சென்றவர்களை பொய் வழக்கில் கைது செய்து பொய் வழக்கு போட்டது அம்பலம்! ஆனால், இது தொடர்பாக களத்தில் இறங்கி முக்கிய ஊடகங்கள் உண்மைகளை வெளிக் கொணராமல் ஊமையாக உள்ளனர். பாலிமார் தொலைகாட்சி மட்டும் அப்பாவிகளின் பெற்றோர் குமுறலை ஒரே ஒரு முறை மேலோட்டமாக காண்பித்தது! கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தை அடுத்து ...
மு.கருப்பசாமி, அருப்பு கோட்டை, விருதுநகர் ”கோயில் சொத்துகளை அபகரித்து வைத்திருப்பவர்கள் அடுத்த பிறவியில் வவ்வால்,பெருச்சாளிகளாக பிறப்பார்கள்” என்கிறாரே மதுரை ஆதீனம்? அவர் வாக்கு பலிக்கப்பட்டும். அப்படியே பல ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு அதிபதிகளாக – கேட்பாரில்லாத சுகபோக வாழ்க்கையை – அனுபவிக்கும் ஆதினங்களுக்கு அடுத்த பிறவி என்ன? என்பதையும் சொன்னால் தேவலாம். ஜி.வெங்கடாச்சலம், வத்தலக்குண்டு, திண்டுக்கல் மாரிதாஸுன் கைது கருத்து சுதந்திரந்திற்கு எதிரானதா? திமுக இதில் பின்வாங்குமா? கருத்து சுதந்திரத்தையும், அவதூறு பரப்பலையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியாது. ஒரு இயக்கத்திடம் இருந்து ...