‘குடிசை பகுதிகளை கொளுத்து இல்லை இடித்து தரைமட்டமாக்கு’ என கடந்த 22 ஆண்டுகளாக நடந்து கொண்டுள்ளன..! சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை (CRRT) என்கிற பெயரில் ஒருங்கிணைந்த கூவம் ஆறு மறுசீரமைப்பு பணியின் கீழ், கூவம் ஆற்றின் கரையோரம் உள்ள ஏழை,எளிய மக்களின் குடியிருப்புகளை ஆக்கிரமிப்புகளாக அறிவித்து அகற்றி, இந்த மக்களை சென்னைக்கு வெளியே புற நகரில் வீசி எறிந்து வருகிறார்கள்! . அந்தப் பட்டியலில் அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் கூவம் ஆற்றின் கரையோரத்தை 247 குடியிருப்புகளை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி அவர்களின் குடியிருப்புகளை தரைமட்டமாக்கியுள்ளனர். 25 ...