ஜெயலலிதா இறப்பு இன்னும் மர்மமாகவே தொடர்கிறது! மக்களுக்கு முதலில் அப்பல்லோ மீதும், சசிகலா மீதும் தான் அதிக கோபம் இருந்தது. ஆனால், தற்போது ஒ.பி.எஸ்சின் மீதும் அந்த கோபம் ஏற்பட்டுவிட்டது. எத்தனையெத்தனை மழுப்பல்கள், முரண்கள்! 50 கோடி செலவில் ஐந்தாண்டு விசாரணை எல்லாம் வீணா? ஜெயலலிதா மரணத்தில் பல ஆழமான சந்தேகங்கள் இன்னும் மக்கள் மனதை அழுத்திக் கொண்டே உள்ளன…! விசாரணை கமிஷன் அமைத்து மூன்றே மாதத்தில் அல்லது அதிகபட்சம் ஒரே ஆண்டில் உண்மையை வெளிக் கொண்டு வருவோம் என்றார்கள் ஓ.பி.எஸ்சும்,இ.பி.எஸ்சும்! உச்ச நீதிமன்றத்தில் ...
சிபி, பேரளையூர் கடலூர் திமுகவில் அதிக உறுப்பினர்கள் இந்துகள் என்றது ,பதவியேற்ற பின் பார்ப்பனர்களைக் கொண்டு ஹோமம் நடத்தியது,பாரத மாதாவிற்கு பூசை செய்த அமைச்சர்கள் செயல் பற்றியும், RSS மக்கள் சேவை அமைப்பு என்ற மா. சுப்பிரமணியனின் கருத்துப் பற்றியும் எதுவும் பேசாதது, தமிழக பாசக எதற்குப் போராடினாலும் அக்கோரிக்கையை உடனே நிறைவேற்றுவது ,அறநிலையத்துறை கல்லூரியின் பேராசியர் வேலைக்கு இந்துகள் மட்டும் விண்ணப்பிக்க கோரியது போன்ற ஸ்டாலினின் செயல்பாடுகள் பற்றி? திமுகவில் இந்துக்கள் அதிகமாக இருப்பது ஒரு யதார்தமான உண்மை! அந்த உண்மையை சொன்னதே ...