ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் மென்மையான இந்துத்துவ போக்குள்ளவர். அடிப்படையில் ராமபக்தர்! கோவில், பக்தி ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். ”அவர் பாஜகவின் பீ டீம்! காங்கிரஸுக்கு மாற்றாக பாஜக அவரை வளர்த்தெடுக்கிறது. ஆகவே, ஒரு வகையில் ஆபத்தானவர்” என்ற குற்றச்சாட்டுகள் உண்மையா..? சமீப காலமாக அரவிந்த் கேஜ்ரிவால் குறித்தும், ஆம் ஆத்மி ஆட்சியின் செயல்பாடுகள் குறித்தும் கடுமையான விமர்சனங்கள், வைக்கப்படுகின்றன! அவர் பாஜகவின் மறைமுக கூட்டாளி என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்படுகிறது! இது குறித்து இந்த கட்டுரையில் நாம் விரிவாக அலசவுள்ளோம். அரவிந்த் ...