போதைப் பொருட்கள் பயன்பாடு தொடர்பாக ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு உள்ளார். குற்றச்சாட்டு எதுவும் நிரூபிக்கப்பட வில்லையாம்! அப்பாவியான அவர் மீது தவறாக குற்றம் சாட்டி வழக்கு புனையபட்டதாம்! வாரே வா! சூப்பர்! ஆர்யன்கானின் நண்பர்கள் அர்பாஸ் மெர்ச்சண்ட், முன்முன் தமாசா ஆகியோர் போதைப்பொருள் தொடர்பான சதியில் ஈடுபட்டதற்கான எந்த வித ஆதாரமும் இல்லை என்று தீர்ப்பு நகலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மூன்று பேரும் கப்பலில் பயணம் செய்தனர் என்பதற்காக அவர்கள் போதைப்பொருள் சதியில் ஈடுபட்டதாக கருதிவிட முடியாது ...













