எட்டு மாதங்களுக்கு மேல் அசராமல் போராட்டம் நடத்தி வருகிறார்கள் ஆஷா சுகாதார பணியாளர்கள். இந்த போராட்டம் ஒட்டுமொத்த கேரளாவின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது. ”12 மணி நேர வேலைக்கு சம்பளம் ஏழாயிரம் போதாது” என போராடும் பெண்களை காவல்துறை கைது செய்தும் போராட்டம் ஓயாதது இடது முன்னணி அரசுக்கு தலைவலியாகி உள்ளது; அடிப்படையில் இவர்கள் அடித்தட்டு உழைப்பாளிகள். மக்களின் அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்குவதற்காக நேரம் காலம் பார்க்காமல் சேவை செய்பவர்கள் தான் ஆஷா பணியாளர்கள். இந்தப் பணிக்கு பத்தாம் வகுப்பு அடிப்படை கல்வித் தகுதியாகும். ...













