பத்தாண்டுகளாக அசாமை அமைதி இழக்க வைத்துள்ள பாஜக அரசு மீண்டும் ஆட்சி அமைக்க அதிரி, புதிரி வேலைகளை செய்கிறது. காங்கிரஸ் பெருந் தலைகளை பாஜகவிற்குள் இழுப்பது, பெண்களின் வங்கிக் கணக்கில் அபரிமிதமான பணத்தை டெபாசிட் செய்வது என அதகள ஆட்டம் ஆடினாலும் காங்கிரஸ் கடுமையான போட்டியை தருகிறது; அசாம் மாநில சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 9 -ல் நடைபெற உள்ளது. 126 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட அசாமில் கடந்த பத்து ஆண்டுகளாக பாஜக ஆட்சி பீடத்தில் இருக்கிறது. முதலில் சர்பானந்தா சோனாவால் முதல்வராகவும் , ...