மகாத்மா காந்தி கொலைக் குற்றவாளிகளை நமது அரசுகளும், நீதித் துறையும் அணுகிய விதத்திற்கும் ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை அணுகிய விதத்திற்கும் தான் எவ்வளவு வேறுபாடுகள்! 15 ந்தே ஆண்டுகளில் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலையானதும், 31 ஆண்டுகள் இவர்களின் சிறைவாசம் தொடர்வதும் குறித்த ஒரு அலசல்! காந்தி கொலையில் மொத்தம் ஒன்பது பேர் தான் கைதானார்கள்! ஏராளமானவர்கள் கண்டு கொள்ளாமல் விடப்பட்டனர்! சமீபத்தில் கூட மகாத்மா காந்தியின் படுகொலை குறித்து தீவிரமாக ஆய்வு நடத்தி வரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் பாண்டா ...