குடியரசுத் தலைவர் வந்தார், கருணாநிதி படத்தை திறந்தார்! வானாளவப் புகழ்ந்தார்! ஆக, மத்திய பாஜக அரசும், மாநில பாஜக கட்சியும் அங்கீகரித்த ஒரு விழாவாக நடந்தது! – தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள்! ஆனால், 1920 ல் அமைந்த நீதிக் கட்சி அரசின் தொடக்கமே தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தொடக்கமாக  ஏன் கருத முடியாது என்பதன் பின்னணியில் பல சுவாரசியமான சுட்டெரிக்கும் உண்மைகள் உள்ளன. கருணாநிதி 1937 ஐத் தான் தமிழ்நாடு சட்டமன்றத்தின் தொடக்கமாகக் கொண்டார்! அதனால் தான் 1997 ஆம் ஆண்டு தான் ...

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு ஏக தடபுடலாக அறிவித்து கொண்டாடப்படுகிறது! உண்மையில் இது தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு அல்ல, சென்னை மாகாண சட்டமன்றத்தின் நூற்றாண்டு என்றே கொண்டாடப்பட்டு இருக்க வேண்டும். 1921 ல் முதல் சட்டமன்றமானது அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்த ஆந்திரா, கேரளா, கர்நாடாகாவின் பகுதிகளையும் உள்ளடக்கியது. தமிழ் நாட்டுக்கேயான சட்டமன்றம் என்பது 1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்பது மொழி அடிப்படையில் உருவான பிறகே ஏற்பட்டது! அதன் பிறகே ஆந்திரா, கேரளா, கர்நாடகா என எல்லா மாநிலங்களுக்கும் என தனியாக சட்டமன்றம் தோற்றுவிக்கப்பட்டது. ...

நான்கே நாட்களில் நச்சென்று நடந்து முடிந்துவிட்டது, சட்டமன்ற கூட்டத் தொடர்! மிக முக்கியமான அடிப்படை வித்தியாசம் ஒன்றை இந்தக் கூட்டத் தொடர் முழுக்க காண முடிந்தது! அது எதிர்கட்சியினருக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டது! குறுக்கீடுகள் இல்லாமல் அவர்கள் குறைகளை சொல்ல அனுமதிக்கப்பட்டது. இந்த ஆட்சி எந்த திசையில் பயணிக்க உள்ளது என்பது கிட்டதட்ட தெளிவாகிவிட்டது..! இந்த நாகாரீகமான அணுகுமுறைய ஜெயலலிதா மற்றும் எடப்பாடி முதல்வராக இருக்கும் போது பார்க்க முடியவில்லை. எதிர்கட்சியின்ருக்கு போதுமான நேரம் தரமறுப்பது, அவர்களை பேசவிடாமல் குறுக்கீடு செய்வது, கருணாநிதியை தாக்கிப் ...