13 பேர் கொல்லப்பட்ட தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸ் அத்துமீறல் தொடர்பாக அருணா ஜெகதீசன் அறிக்கை மே 18 ந்தேதி முதல்வரிடம் தரப்பட்டது. இந்த மூன்று மாதங்களாக அதை வெளியிடாமல் தாமதப்படுத்தியது ஏன்? இந்த அத்துமீறலுக்கு காரணமானவர்களை தண்டிப்பதில் திமுக அரசுக்கு ஏன் தயக்கம்? ”இந்த துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்களை ஆட்சிக்கு வந்தவுடன் தண்டிப்போம்” என்று மூச்சுக்கு முன்னூறு தரம் சொன்னார் ஸ்டாலின். ஆனால், தற்போது மூன்று மாதங்களாக நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை பற்றி மூச்சு கூட விடாமல் மறைத்து உள்ளார் என்பது ...
காவல்துறை பயிற்சிப் பள்ளியில் நடக்கும் அதிர வைக்கும் சம்பவங்களே கதை! காவல்துறையின் மூர்க்கத்தனத்தின் பின்னணி, அதிகாரிகளின் ஈகோ, ஆதிக்க உணர்வும், அடிமை உணர்வும் கட்டமைக்கப்படும் நுணுக்கம் ஆகியவற்றை துல்லியமாக படம் பிடித்த வகையில் இது வரை சொல்லப்படாத கதைக் களமாகும்! ‘டாணா’ என்றால் காவல்நிலையம் என்று பொருள் . டாணாக்காரன் என்பதை காவல்காரன் என்று சொல்லலாம். விக்ரம் பிரபு காவலர் பயிற்சிக் பள்ளியில் சேர்வதில் கதை தொடங்குகிறது. வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற படங்களில் பணிபுரிந்த தமிழ் இப்படத்தில் இயக்குநராக ...
பல்லாண்டு போராட்டங்கள்! இன்னும், சிதம்பரம் கோவில் சிற்றம்பலத்தில் தேவாரம் பாட முடியவில்லை. 300 தீட்சிதர்களால் எட்டுகோடி தமிழர்களை எதிர்க்க முடிகிறது! தலித் பெண் தாக்கப்பட்டது மட்டுமல்ல, இது வரை 25 சம்பவங்களில் எப்.ஐ.ஆர் பதிந்து இருந்தாலும், எந்த அரசும் தீட்சிதர்களை கைது செய்ய முடிந்ததில்லை ஏன்? சட்டத்திற்கு கட்டுப்பட மாட்டார்கள், நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்க மாட்டார்கள், அராஜகம், அடாவடித்தனம் அவர்களின் இயல்பு! பணம், செல்வாக்குள்ளவர்களுக்கு தனி மரியாதை தந்து லட்சக்கணக்கில் தட்சணை பெறுவார்கள்! எளியோர்களை ஏறெடுத்தும் பார்க்காமல் மணிக்கணக்கில் காத்திருக்கச் செய்வார்கள்! யாரும் கேள்வி ...
எஸ்.வேதவள்ளி, பூந்தமல்லி இடைத் தேர்தலில் கிடைத்த உதையால் பாஜக அரசு பெட்ரோல் வரியை குறைத்துவிட்டு மற்ற கட்சிகள் ஆளும் மாநில அரசுகளையும் குறைக்க சொல்லி உள்ளதே? ஆனைக்கு விழுந்த அடியை பூனைகளும் பகிர்ந்து கொள்ள வேண்டுமாம்! சரி தான்! இந்த பெட்ரோல்,டீசல் விலையேற்றத்தின் பின்னுள்ள உண்மையான திமிங்கலம் ரிலையன்ஸ் தான். இன்றைக்கு பெட்ரோலிய நிறுவனங்களின் சரிபாதி உற்பத்தி அம்பானி கைகளில் தான் உள்ளது. அவர் தான் விலையேற்றத்தின் முழு காரணகர்த்தா! அந்த திமிங்கலத்திற்கு மக்களையே தீனியாக்கி ஆள்பவர்கள் தான் மத்திய ஆட்சியாளர்கள்! க.முருகானந்தம், காஞ்சீபுரம் ...
கொலைக் குற்றத்திற்கு ஆளாகியுள்ள கடலூர் திமுக எம்.பி, டி.ஆர்.வி.ரமேஷ், கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கு ஆளான நெல்லை எம்.பி.ஞானதிரவியம் ஆகிய இருவர் மீதான நடவடிக்கைகள் எப்படி மேற்கொள்ளப்படும் என்பதைப் பொறுத்து தான் ஆளும் கட்சி மீதான மக்கள் மதிப்பீடு உருவாகும்! கட்சிக்காரர்களின் அராஜகச் செயலுக்கு அரசு ஆதரவளிக்காது என்பதை உத்திரவாதப்படுத்துவாரா..? தமிழ்நாடு அமைதி பூங்கா என்று அடிக்கடி சொல்லப்படுகிறது.ஒரு நாடு அமைதி பூங்காவாக தொடர்வது என்பது, ஆட்சியில் உள்ள கட்சியானது அதிகாரத்தை எவ்வாறு கையாளுகிறது என்பதைப் பொறுத்து தான் உள்ளது! எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை ...
இருபதாண்டு கால அந்நியர் ஆக்கிரமிப்பு! ஆட்சியாளர்களின் அதி மோசமான முறைகேடுகள்! அமெரிக்க ஆதரவுள்ள படித்த மேல்தட்டுவர்க்கத்தின் ஆடம்பரமான, ஊதாரித்தனமான வாழ்க்கை.. போன்றவற்றை பார்த்து வெறுத்துப் போயிருந்த மக்களில் சிலர், ‘கொள்கை வெறியுடன் மலைமுடுக்குகளில் மறைந்திருந்து உயிர் கொடுத்து போராடிய தாலிபான்கள் வந்தால் வரட்டுமே’ என்று நினைத்தது உண்மைதான்! ஆனால், தற்போது பெண்களை ஒடுக்க துடித்த தாலிபான்களை எதிர்க்க துணிந்துவிட்டனர் பெண்கள்! சட்டம் ஒழுங்கு எதுவுமில்லை; கேள்வி கேட்க முடியாது; தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்! யார் உயிருக்கும் உத்திரவாதமில்லை. யார் வீட்டுக்குள்ளும் அத்துமீறி நுழைந்து சோதனை ...
அமைதி தவழ்ந்த லட்சத் தீவின் மக்களை தற்போது நிம்மதி இழந்து, கொந்தளிக்க வைத்துள்ளது பாஜக! இஸ்லாமியர்களை பெருமளவு கொண்ட இந்த தீவில் அவர்களை இல்லாதொழிக்கவே இப்படி ஒரு சதிதிட்டத்தில் மத்திய பாஜக அரசு இறங்கியுள்ளதாக தெரிய வருகிறது..!இதன் மூலம் பூர்வகுடிகளை பூண்டோடு அழிக்கத் துடிக்கிறது பாஜக! இந்திய யூனியன் பிரதேசங்களின் ஒன்றான இலட்சத்தீவுகள் அரபிக்கடல் கேரள கரைக்கு அப்பால் 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது வரை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்ட இந்த தீவு, பா.ஜ. கவின் முக்கியஸ்தரான குஜராத்தின் அடாவடி அரசியல்வாதியுமான பிரபுல் ...