அகிம்சைக்கு பேர் போன புத்த மதத்தினர் நிறைந்துள்ள மியான்மரில் தான் இன்றைய தினம் உலகத்திலேயே அதிகமான படுபாதக கொலைகள் நடக்கின்றன! நாளும், பொழுதும் சொந்த நாட்டு மக்களையே ராணுவம் கொத்து, கொத்தாக தீ வைத்து கொன்று குவிக்கிறது. என்ன நடக்கிறது? இந்த இடத்தில் 30 பேர் தீ வைத்து எரிக்கப்பட்டனர், அந்த இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் எரிக்கப்பட்டனர்..என்று இடையறாது செய்திகள் மியான்மர் குறித்து வந்து, மனித இதயங்களை உலுக்குகிறது. மியான்மர் என்று சொல்லப்படுகிற பர்மா தமிழர்களுக்கு மிக நெருக்கமான நாடாகும். அதிக தமிழர்கள் பிரிட்டிஷ் ...