பத்திரிகை பணியை மக்கள் நலன் சார்ந்த வேலைத் திட்டமாக வைத்துக் கொள்பவர்கள் மிகச் சிலரே! அவர்களில் முக்கியமானவர் பி.சாய்நாத்! எளிய மனிதர்களின் பாடுகளை சொல்வதற்கும், கிராமப்புற ஏழை எளிய விவசாயிகள் வாழ்க்கையை பதிவு செய்யவும், மூலை முடுக்கெல்லாம் பயணித்து எழுதியுள்ளார்! பரபரப்பு, மலினமான ரசனைகள்,அரசியல் சார்பு நிலை,லாப நோக்கம் ஆகிய அம்சங்களாக பத்திரிகைதுறை வீழ்ந்துபட்டுள்ள நிலையில் சாய்நாத் போன்ற முன்னோடிகளே இன்று நமக்கு நம்பிக்கை ஊட்டுகின்றனர். தற்போது ஜப்பான் நாட்டின் சர்வதேச விருதான ஃபுகுவோகா கிராண்ட் விருதுக்கு தேர்வாகி உள்ளார் பி.சாய்நாத்! தற்போது 64 ...

தாதாசாகேப் பால்கே விருது என்பது கலையுலகில் மிகப் பெரிய முன்னோடி சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் இந்தியாவின் உயரிய விருதாகும்! இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கும்,மேம்பாட்டிற்கும் தன்நிகரில்லா பங்களிப்பு தந்ததாக கருதப்படுவோருக்கு தரப்படுவதாகும்! இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்பட்டு வரும் தாதா சாகேப் பால்கே, இந்தியா மண்ணில் சினிமா என்ற கலையை ஜெர்மன் சென்று கற்று வந்து தானே சுயமாக முயன்று அறிமுகப்படுத்தியவர்!  அவரது முதல் படம் ராஜா ஹரிச்சந்திரா தான் இந்திய சினிமாவின் முதல்படமாகும்.ஒலியும் இல்லாத ஊமைப்படம் தொடங்கி பேசும் படம் காலகட்டம் வரை அதாவது ...

சமூகத் தளத்தில் அழுத்தப்படும் பெண்களின் உணர்வுகளை மிகுந்த உயிர்ப்போடு பதிவு செய்வதில் வல்லவர். பாசம், பரிவு, பரிதவிப்பு, காதல், மோதல், பொறாமை, ஆற்றாமை..அனைத்தும் கொண்ட போலித்தனமில்லாத எளிய மனிதர்களை – அவர்களின் ஆன்மாவை – தனது எழுத்தில் வெளிச்சமிட்டு காட்டி 30 ஆண்டுகளாக எழுதி வருபவர் இமையம்! வெ.அண்ணாமலை (1964) என்ற இயற்பெயரைக் கொண்ட இமையத்தின்”செல்லாத பணம்”  நாவலை,  2020 ஆண்டுக்கான விருதுக்கு, சாகித்திய அகாதமி தேர்ந்தெடுத்து உள்ளது. இதற்கு ஒரு இலட்ச ரூபாய் பரிசும், பட்டயமும் வழங்கப்படும். கொலைச் சேவல், சாவுசோறு, மண்பாரம், ...