மத்திய அரசுக்கு சித்தமருத்துவ ஆய்வுகள் என்றாலே எட்டிக் காயாகக் கசக்கிறது! அதே சமயம் பல வருட ஆராய்ச்சியில் நடைமுறை ரீதியாக நாம் நிருபித்த சித்த மருத்துவக் கண்டுபிடிப்புகளை ஆயூர்வேத கண்டுபிடிப்பாக மனசாட்சியின்றி மடைமாற்றம் செய்வது இனிக்கிறதோ…? புற்றுநோய் குறித்து சித்த மருத்துவத்தில் பல குறிப்புகள், மற்றும் பெரும் மருந்துகள் உள்ளன. சென்னையில் அந்தக் காலத்தில் வாழ்ந்த ஜட்ஜ் பலராமையா போன்ற புகழ் பெற்ற சித்த மருத்துவர்கள் புற்று நோய்க்கு வெற்றிகரமாக சிறப்பு மருந்துகளை கொடுத்து பலரை காப்பாற்றி உள்ளனர். இது குறித்து அவர் எழுதிய ...
ஒரே இந்தியா! ஒரே பாரம்பரிய மருத்துவம் என்கிற ரீதியில் ஆயூர்வேதத்தை தான் ஆதரிப்போம். சித்தா தேவையில்லை என்கிறது மத்திய அரசு! நீட் தடை மசோதாவை போலவே, சித்த மருத்துவ பல்கலைக் கழகத்தையும் முடக்கி வைத்துள்ளார் கவர்னர்! சித்த மருத்துவத்தை சிதைத்து, சமஸ்கிருத ஆயூர்வேதமே சகலமும் என நிறுவ துடிக்கிறார்கள்! ஒரே இந்தியா! ஒரே பாரம்பரிய மருத்துவம் என்பது என்ன? இந்தியா முழுவதையும் ஒற்றை பண்பாட்டில் அடக்க முயலும் ஒன்றிய அரசு இந்திய முழுமைக்குமான ஒற்றை மருத்துவமாக ஆயுர்வேதத்தை முன்மொழிகிறது. சிக்கல் இங்குதான் எழுகிறது தமிழ்நாட்டைத் ...