சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரால் ஆன்மீக வேஷம் போட்டு சின்னஞ் சிறுமிகளிடம் பாலியல் வன்மத்தில் ஈடுபட முடிகிறதென்றால், அது அந்த தனிமனிதனிடம் இருக்கும் குறைபாடு மட்டுமல்ல. இந்த சமூகமும் ஒரு குற்றவாளிதான்! கண்மூடித்தனமான பக்தியால் ஒருவரை கடவுளுக்கு நிகராக நம்புவது என்பது நமது கலாச்சாரத்திலேயே தொன்றுதொட்டு திட்டமிட்டு மக்களுக்கு காலாகாலமாக கற்பிக்கப்பட்டு வந்துள்ளது! அறுபத்திமூன்று நாயன்மார்களில் சிறுத் தொண்டர் நாயனார் என்பவரின் கதை என்பது என்ன..? பிள்ளைக்கறி வேண்டிய ஒரு நரசாமியாருக்கு அதாவது சிவனடியாருக்கு சிவபக்தர்களான கணவனும், மனைவியும் தங்கள் ஐந்து வயது ...
‘’இந்தாங்க..ரஜினிகாந்த் வந்தப்ப கொடுத்துட்டு போனாரு’’ ன்னு என் கையில ஒரு ஆடியோ கேசட்டை கொடுத்தார் துக்ளக் தலைமை துணை ஆசிரியர் மதலை! அதை வாங்கி பார்த்தப்ப சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டிருந்த ’பாபா’படப் பாடல்களின் ஆடியோ கேசட் என புரிய வந்தது! ‘’ரஜினிகாந்த் குடுத்தாரா..?’’ என்றேன் புருவத்தை உயர்த்தியபடி! ‘’ஆமா,அவர் தான் நம்ம சாரை பார்க்க வந்த போது இங்கே நம்ம இடத்திற்கும் வந்து ஒவ்வொருவராக தேடி வந்து இதை கொடுத்துட்டு, இன்னும் யாராவது விடுபட்டு இருக்காங்களான்னு கேட்டு, உங்களுக்கும் சேர்த்து கொடுத்துட்டு போனாரு..’’ வாங்கி ...