பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் தீர்ப்பில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம்,அந்த நிகழ்வு “தன்னிச்சையான செயல்“ என்று சொல்லியிருக்கிறது. இது மட்டுமல்லாமல் தீர்ப்பில் ஒரு இடத்தில் 1949ல் ராமர் சிலையை மசூதிக்குள் தடையை மீறி வைத்ததை “தெய்வீகத் தலையீடு’’ என்றும் குறிப்பிட்டிருக்கிறது. நீதிமன்றம் இந்த வழக்கை எப்படி அணுகியுள்ளது என்பதற்கு இந்த ஒரு வார்த்தையே போதுமானதாகும். ஆனால்,28 ஆண்டுகளுக்கு முன்பு மசூதியைத் தகர்த்தபோது இப்படியொரு தீர்ப்பை நீதிமன்றத்திடம் நாம் பெறமுடியும் என அந்த சம்பவத்தில் ஈடுபட்ட தலைவர்கள் கனவில் கூட நினைத்திருக்க வாய்ப்பில்லை! “முட்டாள்தனம். ...