”நான்கே வருஷத்தில் நட்டாற்றில் விடுகிறீர்களே” என ஒருதரப்பும், ”நாலு வருஷத்தில் நல்ல பணம் கிடைக்குது” என மறுதரப்புமாக அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பும், ஆதரவும் சம விகிதத்தில் இருக்கிறது! உண்மை என்ன? இந்திய ராணுவம் குறித்த ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்! ”பதினெழரை வயசுல சேரணும், 21 வயசுல வெளியேறிடணும்” என முதலில் அறிவித்தார்கள்! இதற்கு எதிர்ப்பு வலுத்தவுடன், ”18,19 வயதிலும் சேரலாம்,23 வயது வரை இருக்கலாம்.” என மாற்றியுள்ளனர். இந்த ஒரு சம்பவமே முறையான திட்டமிடல் இன்றி, அவசர கதியில் இந்த திட்டத்தை கொண்டு வந்ததை ...