ஏன் இவ்வளவு குளறுபடிகளை செய்துள்ளது தமிழக காவல் துறை? உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தலை குனிய நேர்ந்தது எதனால்..? ராஜேந்திர பாலாஜியை தண்டிக்கும் நோக்கம் உண்மையில் தமிழக அரசுக்கு இருக்கிறதா? இல்லை தண்ணிகாட்டி விட்டுவிடுவது தானா? ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி பலரிடமும் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்ற ராஜேந்திர பாலாஜி மீது ஆகஸ்ட் மாதம் தொடங்கி சுமார் 32 மோசடிப் புகார்கள் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து வந்துள்ளது! இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே தமிழக அரசும், காவல்துறையும் அசமந்தமாக இருப்பதாகவே தெரிகிறது. ...

அடக்குமுறைச் சட்டங்கள், மக்களை பிரித்தாளும் தந்திரங்கள், அதிகார துஷ்பிரயோகங்கள்..! இது தான் இன்றைய பாஜக அரசு! மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பயங்கவாத முத்திரை! தேச விரோத குற்றச்சாட்டுகள்..! சமீபகாலமாக உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி, மனித நேயத்தை காட்டி வருவதற்கு இந்த தீர்ப்பையும் உதாரணமாக சொல்லலாம்..! நடாஷா நார்வல், தேவாங்கனா கலிதா,அசீப் இக்பால் தன்ஹா என்ற மூன்று மாணவ மணிகளுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லி உயர்நீதி மன்றம் பிணை வழங்கியது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவிகளான ...