சினிமா – நேற்று இன்று நாளை-1 90 வருடப் பயணத்தில் தமிழ்ச் சினிமா கடந்து வந்துள்ள பாதை சுவாரசியமானது! முதல் இருபதாண்டுகள் புராண, இதிகாசங்களிலேயே மூழ்கி திளைத்த நிலையிலும் கூட சமூக மாற்றத்திற்கான தேடல்களும், அதற்கான குரல்களும் இருக்கவே செய்தன..! இன்றைக்கு திரும்பிப் பார்த்தாலும் பிரமிக்கதக்க மாற்றங்கள் நடந்துள்ளதை உணரமுடிகிறது..! தமிழ்ச் சினிமா பேசத் தொடங்கி 90 ஆண்டுகள் நிறைவு பெறுகிற இந்நாளில், தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்திருக்கிறது . அமெரிக்காவில்அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஆஸ்கார் விருதுக்கான போட்டியில், வெளிநாட்டு படங்களுக்கான ...
தேசபக்தி என்பதை வியாபாரமாக, அரசியல் அதிகாரமாக, ஏன் போதையாகவும் கூட பலர் பயன்படுத்துகின்றனர்! இதையெல்லாம் பார்த்து அலுத்த சூழலில் அதை இயல்பான கண்ணோட்டத்துடன், நம்பகமான தன்மையில் சித்தரித்துள்ள வகையில் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது சர்தார் உதம்.பொய்யான, பகட்டுத்தனமான தேசபக்தியாளர்களையும், அப்படியான கமர்ஷியல் படங்களையும் கண்டு சலிப்படைந்துள்ள நமக்கு இந்தப் படம் ஒரு பொக்கிஷமாக இருக்கிறது. இன்று நினைத்தாலும் மனதை உலுக்கிப் போடக்கூடிய ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய ஜெனரல் மைக்கேல் டயர் என்ற பிரிட்டிஷ் அதிகாரியை கொன்றுவிட சபதம் ஏற்று அதை பல வருட முயற்சிக்கு ...