கரூரில், கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செந்தில் பாலாஜி, போட்டி வேட்பாளர்களை சுயேட்சையாக களம் இறக்கி, கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவது காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுக்க பெரிய வெற்றியை பெற்றாலும், கரூர் மாவட்டத்தில் திமுகவிற்கு பலத்த அடி கிடைத்தது! மாவட்டத்தின் 12 மாவட்ட கவுன்சிலர்களில் ஒன்பது இடங்களில் அதிமுக வென்றது. மூன்றில் தான்  திமுக வெற்றி பெற்றது.  மொத்தம் உள்ள 115 ஒன்றிய கவுன்சிலர்களில் 70க்கும் மேற்பட்ட ...

ஏன் இவ்வளவு குளறுபடிகளை செய்துள்ளது தமிழக காவல் துறை? உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தலை குனிய நேர்ந்தது எதனால்..? ராஜேந்திர பாலாஜியை தண்டிக்கும் நோக்கம் உண்மையில் தமிழக அரசுக்கு இருக்கிறதா? இல்லை தண்ணிகாட்டி விட்டுவிடுவது தானா? ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி பலரிடமும் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்ற ராஜேந்திர பாலாஜி மீது ஆகஸ்ட் மாதம் தொடங்கி சுமார் 32 மோசடிப் புகார்கள் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து வந்துள்ளது! இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே தமிழக அரசும், காவல்துறையும் அசமந்தமாக இருப்பதாகவே தெரிகிறது. ...

‘எதற்காக இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்கள்..?’ என ராஜேந்திர பாலாஜி கைது தொடர்பாக தமிழக அரசை கேள்வி கேட்கிறது உச்ச நீதிமன்றம்! ஆனால், பல வழக்குகள் நிலுவையில் இருக்க, இவ்வளவு அவசரமாக ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே எடுத்துக் கொண்டது ஏன்…? மோசடி குற்றங்கள் செய்து ஓடி ஒளிந்த ராஜேந்திர பாலாஜிக்காக இவ்வளவு பொங்க வேண்டிய அவசியம் என்ன..? ஊருக்கென்றே உழைத்த உத்தமரை தமிழக காவல்துறை கைது செய்துவிட்டது போலும்!  ”நீதிமன்றத்தை ஏன் தர்ம சங்கடப் படுத்துகிறிர்கள்..” என ...

ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அராஜகம், கொலை வழக்கு உள்ளிட்ட எதிலும் திமுக ஆட்சியில் ராஜேந்திர பாலாஜி மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், ஒரு சீட்டிங் வழக்கிலே கைது செய்யப் போனார்களாம், தப்பித்துவிட்டாராம்! என்ன நடக்கிறது இந்த ஆட்சியில்? கமிஷன் , கலெக்‌ஷன், கரப்ஷன் ஆகிய  மூன்றையும் மூச்சாகக் கொண்டு செயல்பட்ட அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் ஊழல்களைப் பற்றி சி.ஏ.ஜி. எனப்படும் மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கையே துல்லியமாக அம்பலப்படுத்தியுள்ளது. ஏழை, எளிய பால்விவசாயிகளையும், அடிநிலைத் தொழிலாளிகளையும் சுரண்டித்தான் பல நூறு கோடி சொத்து ...