டாஸ்மாக் மதுக்கடைகளால் பல்லாயிரக்கணக்கான பெண்களின் தாலி பறிபோனவண்ணம் உள்ளது. தமிழகம் இந்தியாவிலேயே அதிக விதவைகள் கொண்ட பிரதேசமாகிவிட்டது..! பல லட்சம் தமிழக இளைஞர்கள் உடல் நலமும், உள்ள நலமும் கெட்டு வேலை செய்யத் திரானியற்று குடும்பத்திற்கு பாரமாக வாழ்ந்து வருகின்றனர். நாட்டுக்கு பயன்பட்டிருக்க வேண்டிய இளைய தலைமுறையின் உழைப்பாற்றல் தெருப்புழுதியில் புரள்கிறது! இதனால் தான் வட மாநில தொழிலாளர்களின் உழைப்பை தமிழகம் சார்ந்திருக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாகிவிட்டது! தமிழகத்தின் உற்பத்தி திறனும், உழைக்கும் திறனும் ஆறாய் பெருக்கெடுத்தோடும் மதுக் கலாச்சாரத்தால் சூறையாடப்பட்டு வருகிறது! ...