புரட்சிக்கும், புதிய பாதைக்கும் பெயர் போன மேற்கு வங்கம், அரசியல் வன்முறை கலாச்சாரத்திலும் நம்பர் ஒன்னாகும்! அரசாங்கத்தைவிட, அரசியல்வாதிகளுக்குத் தான் அங்கு பவர் அதிகம்! பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம், ஒரு கொலைக்கு பல கொலைகள் எனத் தொடரும் அராஜக அரசியலுக்கு அத்தாரிடியே மேற்குவங்கம் தான்! இதற்கு காரணம், மேற்கு வங்க சமூகமே அடிப்படையில் கட்சி அடிப்படையிலான சமூகமாகும்! அது அவ்வாறாக மாறி வெகு நாட்களாகிவிட்டது. அன்றாட மக்கள் வாழ்க்கையில் குடும்பம், சாதி, மதம் , அரசு,போலீஸ்  ஆகிய அமைப்புக்கள் செலுத்தும் ஆளுமையைவிட கட்சி ...