காவ்ரே பாய்ரே ஆஜ் – காதலின் ஊடாக சமகால அரசியலைப் பேசுகிறது! (Ghavre Baire aaj -வீடும் உலகமும் இன்று). இது ஒரு முக்கோணக் காதல் கதை. மனித நேய விழுமியங்களுடன் பெண்ணிய உணர்வுகளை சொல்லும்  அபர்ணா சென்னின் இந்த அற்புத படைப்பானது கண்ணியமான காதல் எது? கபட வேஷம் தரித்த காதல் எது என்ற புரிதலை நுட்பமாக காட்சிப்படுத்துகிறது! இந்தியாவில் தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் வலதுசாரி இந்துத்துவ அரசியலை, அதன் அணுகுமுறைகளை நேர் கொண்ட பார்வையுடன் எதிர்கொள்ளும் அந்த பத்திரிகையாளன் கதாபாத்திரம் பிரமிப்பூட்டுகிறது. ...